- Advertisement -
25 C
Colombo
Home News Sports இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

- Advertisement -

இந்திய அரசாங்த்திடம் வரி விலக்கு அனுமதி வாங்காவிடில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரை இந்தியாவுக்கு வெளியே வேறு நாடொன்றில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு (பி.சி.சி.ஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஐ.சி.சி. மேற்கொள்ளும். டிக்கெட் விற்பனை, தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு உரிமம், அனுசரணையாளர்கள் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஒவ்வொரு கிரிக்கெட் சபைகளுக்கும் ஐ.சி.சி. பகிர்ந்தளிக்கும்.

பொதுவாக ஒரு நாடு போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்தால், அந்த நாட்டின் கிரிக்கெட் சபை தங்கள் நாட்டு அரசாங்திடம் பல்வேறு வரி விலக்குச் சலுகைகளை பெற்றுக்கொள்ளும். இதனால் வரியாக செலுத்தக்கூடிய கோடிக்கணக்கான பணம் ஐ.சி.சி. க்கு எஞ்சும்.

இந்த முறை இந்திய அரசாங்கம் வரி விலக்குக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் வரி விலக்குக்கு அனுமதி வாங்கி தந்தால் மாத்திரமே போட்டியை இந்தியாவில் நடத்த நடவடிக்க எடுப்போம். இல்லை என்றால் வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பி.சி.சி.ஐ.க்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்திருந்தது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற கூட்டத்தின்போது 2019 டிசெம்பர் மாதம் வரை ஐ.சி.சி. அவகாசம் அளித்திருந்தது. அதன்பின் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை அந்த அவகாசத்தை நீட்டித்தது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு அமுலில் இருப்பதால் பி.சி.சி.ஐ. மேலும் அவகாசம் கேட்டுள்ளது. ஒருவேளை இம்முறை அனுமதி வாங்கத் தவறினால் 2021 உலகக்கோப்பை டி20 தொடர் இந்தியாவுக்கு வெளியே வேறொரு நாட்டில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.சி.சி. திட்டவட்டமாக கூறியுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாகிஸ்தானில் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு தூக்கு !!

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும்...

‘ஜப்பான் கடல்’ என்றழைக்கப்படும் பகுதியில் அமெரிக்க கப்பலை விரட்டிய ரஷ்யா!

‘ஜப்பான் கடல்’ என்று அழைக்கப்படும் பகுதியில் தமது கடற்பிரதேசத்தில் நுழைந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை தமது போர்க்கப்பல் விரட்டியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் தமது கடற்பரப்பில் 2 கி.மீ....

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு கோடி ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து...

ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான...

சூடானின் முன்னாள் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு!

சூடானின் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். சூடான் நாட்டில் ஜனநாயக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமராக இருந்தவர் சாதிக் அல் மஹ்தி, கடந்த ஒக்டோபர்...

Related News