- Advertisement -
30 C
Colombo
Home Local News கொரோனா போல் இரண்டு மடங்கு உயிர்களை காவுகொண்டது டெங்கு

கொரோனா போல் இரண்டு மடங்கு உயிர்களை காவுகொண்டது டெங்கு

- Advertisement -

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் மாதங்களில் மாத்திரம் டெங்கு காய்ச்சல் காரணமாக குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலப் பகுதியில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட 19, 474 பேர் பதிவாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 10 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத்தின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார மற்றும் சுதேச அமைச்சர் பவித்ரா வன்னிஆராய்ச்சி மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் பங்கேற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இந்தக் கலந்துரையாடல் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி சுகாதார அமைச்சில் இடம்பெற்றுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 105,049 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை 150 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், கோவிட் 19 உடன் ஏனைய நோய்களையும் முறையாக நிர்வகிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் ஆகியன ஸ்ரீலங்காவின் சுகாதார துறை மீதான அழுத்தத்தை அதிகரித்துவருவது தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கடந்த ஏப்ரல் மாதமே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

தமது ஆய்வுப் பிரிவின் அறிக்கையின் பிரகாரம் டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் ஆகியன ஸ்ரீலங்காவின் சுகாதாரத்துறை மற்றும் சமூகத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்து வருவதாக கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யூ.ரோஹணவின் கையொப்பத்துடன் வெளியான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பி.சி.ஆர். முடிவுகள் கிடைக்க தாமதித்தால் கொத்தணியே உருவாகிவிடும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் கிடைப்பது 48 மணித்தியாலங்களை விடவும் தாமதமாகுமாயின் குறித்தவொரு பிரதேசத்தில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டு அடுத்த தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கு முன்னர் ஒரு கொத்தணியே உருவாகிவிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள்...

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

Related News