- Advertisement -
31 C
Colombo
Home World News திருமணமான பெண்களின் புகைப்படங்களை திருடி இளைஞர்கள் செய்து வந்த அதிர்ச்சி செயல்! கணவர்களுக்கு மிரட்டல்

திருமணமான பெண்களின் புகைப்படங்களை திருடி இளைஞர்கள் செய்து வந்த அதிர்ச்சி செயல்! கணவர்களுக்கு மிரட்டல்

- Advertisement -

தமிழகத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் திருமணமான பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை திருடி, அதை மார்பிங் செய்து, கணவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த இரண்டு பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தனிப்பிரிவு ஒன்றை வைத்துள்ளார்.

அதன்மூலம் பல முக்கிய வழக்குகளை விரைவாக துப்புத் துலக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் பரமக்குடியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரின் புகைப்படத்தை அவரது பேஸ்புக்கில் இருந்து திருடிய மர்ம ஆசாமி ஒருவன், அதனை ஆபாசப் படமாக மார்பிங் செய்து, கணவனுக்கு அனுப்பி 20 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளான்.

இதனால் இது குறித்து தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டதால், பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

அதன் பின் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் பரமக்குடி உலக நாதபுரம் பகுதியை சேர்ந்த ரோஹித் என்பது தெரியவந்தது.

பேஸ்புக்கில் குடும்ப பெண்களின் படங்களைத் தேடி எடுத்து அவற்றை மார்பிங் செய்து பணம் பறித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே போல சென்னை புதுப்பாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் இன்ஸ்டாகிராமில் இருந்து அவரது புகைப்படத்தை திருடி, ஆபாசமாக மார்பிங் செய்து அவரது கணவருக்கு படத்தை அனுப்பி , தனது வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தும் படி மிரட்டியுள்ளான்.

பணம் செலுத்த மறுத்தால் சமூக வலைதளங்களில் மனைவியின் ஆபாச படத்தை வெளியிடப் போவதாக பிளாக்மெயில் செய்துள்ளான்.

வங்கிக் கணக்கு எண்ணை வைத்து, அது ராமநாதபுரம் மாவட்டம் என்பதை கண்டறிந்து எஸ்.பி வருண்குமாரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

வங்கிக் கணக்கை வைத்து துப்புத் துலக்கிய பொலிசார், சுகன்யா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த உச்சிப்புளியை சேர்ந்த சிவக்குமார் என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் தற்போது அதிகளவில் நடப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடும்பப் பெண்கள் தங்கள் செல்பி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை கூடுமானவரை தவிர்ப்பதே நலம் என்றும், இல்லையெனில் வில்லங்கம் எப்போது வேண்டுமானாலும் வீடுதேடி வரலாம் என்று பொலிசார் எச்சரிக்கின்றனர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு அதனை அனைவருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அதிகரித்துச்செல்கின்ற நிலையில், தடுப்பூசி பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கும் அவசர நடவடிக்கை என்ன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு...

“ஜனாசா எரிப்பு விவகாரத்தைப் போன்று கார்த்திகைத் தீபத்திருநாளிலும் அரசு கைவைத்துள்ளது“

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி ஸ்லாமிய மதவிவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மதவிவகாரங்களில் அரசின்...

திட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது – கல்வியமைச்சர்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடத்த முடியாது என்று கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட திகதிகளில் பரீட்சை ஆரம்பமாவதற்கு 06 வாரங்களுக்கு முன்னதாக புதிய...

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாதிருப்பதை தடுக்க விசேட திட்டம்

போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகாமல் இருப்பதை தடுப்பதற்கு உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பயன்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படத்தவுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். அந்தவகையில் பாராளுமன்றத்தில் 2021...

12 மணி நேரத்தில் சூறாவளிக்கு சாத்தியம்…..

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம், ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில்...

Related News