- Advertisement -
25 C
Colombo
Home Local News தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த

தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த

- Advertisement -

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “பொதுத் தேர்தலொன்றை நிச்சயமாக நடத்தியே ஆகவேண்டும். இதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரும் தயாராகிக் கொள்ள வேண்டும். இது அவரின் பொறுப்பாகும்.

தேர்தலை நடத்தத்தான் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுத் தேர்தலுக்கான பணிகளுக்கு அவர்கள் தயார் நிலையில்தான் இருக்க வேண்டும். நீதிமன்றில் தீர்ப்பு வந்தவுடன், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என எதற்காகக் கூறுகிறது என்று உண்மையில் தெரியவில்லை. நாம் எதிரணில் இருக்கும்போது தேர்தல்களை நடத்துமாறுத்தான் வலியுறுத்தி வந்தோம். உண்மையில், தேர்தலின் ஊடாக அரசாங்கத்தை கவிழ்ப்பது தான் எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அத்தோடு, அரசாங்கம் தான் தேர்தலை பிற்போட நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால், இங்கு அனைத்தும் தலைக்கீழாகத்தான் இடம்பெறுகின்றன. இதனை மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கும் தெரியும் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்று.

அதேநேரம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாம் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். எம்மைப் பொறுத்தவரை இந்த விடத்திற்கு பொறுப்பான இரண்டு- மூன்று நபரைக் கைது செய்வதல்ல நோக்கமாகும்.

இதன் பின்னணியைக் கண்டறியவேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெறும் என முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஒருவரை கைது செய்து தற்போது விசாரித்து வருகிறோம். இவ்வாறு நாம் இந்த விடயத்தில் மிகவும் தீவிரமாகவே செயற்பட்டு வருகிறோம்.” என கூறினார்

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...

Related News