- Advertisement -
24 C
Colombo
Home Local News பொலிஸாரின் செயற்பாடு குறித்து கண்ணீருடன் மனித உரிமை ஆணைக்குழுவில் மாற்றுத்திறனாளி முறைப்பாடு

பொலிஸாரின் செயற்பாடு குறித்து கண்ணீருடன் மனித உரிமை ஆணைக்குழுவில் மாற்றுத்திறனாளி முறைப்பாடு

- Advertisement -

மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார், அவர் மீது கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் கடந்த வாரம் இரு குடும்பங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு சென்ற அவர்கள் மீதும் வாள்வெட்டு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கீரிமலையை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

எனினும் அவ்வாறு கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சந்தேகநபர் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அத்துடன் பொலிஸார் தம்மை கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக பொலிஸாருக்கு எதிராக இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு முறைப்பாட்டினை பதிவு செய்தவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “கீரிமலை பகுதியில் நான் வசித்து வருகின்றேன். கடந்த வாரம் எனது வீட்டிற்கு அருகில் இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோதல் நடைபெற்ற வீடு என்னுடைய வீடுதான் என நினைத்து வந்த பொலிஸார், பூட்டியிருந்த எனது வீட்டின் படலையை உடைத்து உள்ளே வர முயற்சி செய்தனர். அப்போது அங்கு நின்ற பொலிஸார் ஒருவருக்கு எனது வீட்டின் படலையில் இருந்த தகரம் கையில் வெட்டியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொலிஸார் வீட்டிற்குள் நுழைந்து என்னை கடுமையாக தாக்கினர்.அங்கவீனம் உற்ற என்னை கட்டை ஒன்றினால் அடித்து துன்புறுத்தினார்.

அப்போது எமது வீட்டில் மோதல் இடம்பெறவில்லை. அயல் வீட்டிலேயே மோதல் இடம்பெற்றது என கூறினேன். அதனையும் கேட்காத பொலிஸார் என்னை தடிகளாலும் கொட்டன்களினாலும் தாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து உடனடியாக என்னை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் மறுநாளே நான் பிணையில் விடுவிக்கப்பட்டேன்.

பொலிஸாரின் தாக்குதலினால் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஐந்து நாட்கள் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளேன்” என்றார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...

Related News