- Advertisement -
25 C
Colombo
Home Local News சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது... கொரோனா சட்டதிட்டங்களை ஒரு குடும்பமோ அல்லது...

சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது… கொரோனா சட்டதிட்டங்களை ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவருமோ மீற முடியாது.

- Advertisement -

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்புநாட்டிலுள்ள அனைவருக்கும் உள்ளது.வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது.ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீறமுடியாது என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் நிலவுகின்ற நிலையில் சுகாதார பணிப்பகத்தின் செயற்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியும். இப்போது வரையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களிடம் மட்டுமே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது.அதற்கும் அப்பால் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டவர்களில் அதிகளவில் நோய் கண்டறியப்பட்டு வருகின்றது.குவைத்தில் இருந்து வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் நோய் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கான மருத்துவ நடவடிக்கைகளை அதிகளவில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனினும் வைரஸ் சமூக பரவலாக மாறாத வகையில் நாம் செயலாற்றி வருகின்றோம்.வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வர விருப்பம் தெரிவிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இப்போது வரையில் 123 நாடுகளில் இருந்து 42 ஆயிரத்து 522 பேர் தாம் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.இவர்களிலும் அதிகளவானவர்கள் பணியாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.குறுகியகால வீசா கொண்டவர்களும் உள்ளனர். எனினும் இவர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளில் பி.சி.ஆர் பரிசோதனை செய்த பின்னரே இலங்கைக்கு வர முடியும் என்ற புதிய நிபந்தனைகள் இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கைக்குள் கொவிட் -19 தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த நாம் எவ்வளவு முயற்சிகளை எடுத்தும் ஒரு சிலர் அவற்றை மீறி செயற்பட்டு வருகின்றமையும் அவதானிக்க முடிகின்றது.கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பு வெறுமனே எமக்கோ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ள கடமை அல்ல.நாட்டிலுள்ள அனைவருக்கும் இதில் பொறுப்புடன் செயற்படும் கட்டாயம் உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது.ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீறமுடியாது. அவ்வாறு மீறுவதனால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றது என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்!

ஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்டிருந்த 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் அமைப்பு எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது. இது இரு தரப்புக்கும் இடையே அமைதியை கொண்டுவர பெரும் முன்னேற்றமாக...

ஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு தலைவர்களுக்கு சிறைத் தண்டனை!

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில் சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு அமைப்புகளின் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசுவா வோங், இவான் லாம் மற்றும் ஆக்னஸ்...

அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 3ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டதோடு,...

பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை….

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் பதவிகளில் இருந்து நீக்குவதாக அமைச்சர் வன்னியாராச்சி கடிதம்...

நாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டு அரசு மக்களை ஏமாற்றுகிறது…

நாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக அரசாங்கம் தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகயவின் ரஞ்சித் மத்தும பண்டார. பொலிசார் சுயாதீனமாக இயங்க முடியாத சூழ்நிலையில் நாட்டில்...

Related News