- Advertisement -
28 C
Colombo
Home Editor Picks கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?

கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?

- Advertisement -

கொரோனா வைரஸ் உலகையே நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவும் செய்திகள் நம்மிடம் இடைவெளி இல்லாமல் வந்து சேர்கிறது.

இதனால் இயல்பாகவே பதற்றம் அடைபவர்கள் மற்றும் ஒரே செயலை பலமுறை செய்ய தூண்டும் ஓ.சி.டி (Obsessive-compulsive disorder) எனப்படும் மனநோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

செய்திகள் மற்றும் கொரோனா குறித்து படிப்பதை கட்டுப்படுத்துங்கள்

கொரோனா வைரஸ் குறித்து தினமும் கேட்கும் செய்திகள் நமக்கு கவலை அளிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இந்த செய்திகள் இன்னும் அதிகம் பாதிப்படைய செய்யும்.

கொரோனா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியபோது உலக சுகாதார நிறுவனம் மன நிலையை பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கியது. இந்த ஆலோசனைகள் சமூக வலைதளத்தில் அதிகம் வரவேற்கப்பட்டன.

பதற்றம் அடைபவர்கள் குறித்து பிரிட்டனின் நிக்கி லிட்பெட்டர் கூறுகையில், ”கட்டுப்பாட்டை மீறி நிலைமை மோசமடையும்போது ஏற்படும் அச்சம், நிச்சயமற்ற தன்மையை பொறுத்துக்கொள்ளமுடியாமல் ஏற்படும் கவலை, இவை இரண்டும்தான் நாம் பதற்றம் அடைய காரணமாக உள்ளது” என்கிறார். எனவே இயல்பாகவே பதற்றத்துடன் இருக்கும் நபர்களுக்கு இந்த சூழ்நிலையை எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது,” என்கிறார்.

”நாம் அறியாத பல விஷயங்கள் குறித்துதான் பொதுவாகப் பதற்றம் ஏற்படும். ஏதாவது நடந்து விடுமோ என்ற உணர்வில்தான் பதற்றம் வேரூன்றி இருக்கிறது,” என்கிறார் மனநிலைக்கான அறக்கட்டளை ஒன்றின் செயற்பாட்டாளர் ரோஸி.

செய்திகளைப் படிக்கும்போது கவனம் தேவை. கேண்டில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நிக், கொரோனா வைரஸ் குறித்து அதிக செய்திகளைப் படிப்பதே கவலை அளிக்கிறது என்கிறார். ”நான் கவலை அடையும்போது, என் எண்ணங்கள் கட்டுப்பாட்டை மீறி, பேரழிவின் விளைவுகள் மீது செல்லத் தொடங்கியது,” என கூறுகிறார். மேலும் தனது பெற்றோர்கள் மற்றும் தனக்குத் தெரிந்த முதியவர்களின் நிலை குறித்தும் கவலையாக இருக்கிறது என்கிறார்.

”பொதுவாக கவலையில் இருந்தால், அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வேன். ஆனால் தற்போது அப்படி செய்ய முடியவில்லை,” என்கிறார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here