- Advertisement -
31 C
Colombo
Home Local News போராட்டத்தின் வெற்றி பாதுகாக்கப்படும் வகையிலேயே வெசாக் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்

போராட்டத்தின் வெற்றி பாதுகாக்கப்படும் வகையிலேயே வெசாக் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்

- Advertisement -

போராட்டத்தின் வெற்றி பாதுகாக்கப்படும் வகையிலேயே வெசாக் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வெசாக் நோண்மதி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் போன்றே முழு உலகும் கொரோனா தொற்றுநோயின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ள நிலையிலேயே இம்முறை புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் நிலை, பரிநிர்வாணம் இடம்பெற்ற வெசாக் பண்டிகையைக் கொண்டாட வேண்டியேற்பட்டுள்ளது. கடுமையான அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் பௌத்தருக்கே உரித்தான மன அமைதியுடன் செயற்பட்டமையினால் இலங்கை வாழ் மக்களை அந்தத் தொற்றுநோயிலிருந்து வெற்றிகரமாக மீட்டெடுப்பதற்கான நேரம் மிகவும் அண்மித்துள்ளது.

எனவே, நாம் தொற்றுநோயிலிருந்து மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட போராட்டத்தின் வெற்றி பாதுகாக்கப்படும் வகையிலேயே வெசாக் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

ஊரடங்குச் சட்டம் அல்லது சுகாதாரரீதியான சட்டதிட்டங்கள் தர்மத்தின் அடிப்படையிலான வாழ்வுக்குத் தடையாக அமைய மாட்டாது என்பதே எனது புரிதலாகும். இரண்டாயிரம் வருடங்களாக தர்மத்தின் அடிப்படையில் வாழ்வினைக் கழித்த பௌத்தர்களுக்கு வீட்டிலிருந்தவாறே பொருள் சார்ந்த மற்றும் கொள்கைப் பூஜைகளில் ஈடுபடுவதற்கான ஒழுக்கப்பயிற்சி காணப்படுகிறது. வெசாக் தினத்தில் விளக்கேற்றி, அலங்காரங்களைச் செய்து உள மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்வது பௌத்தரின் பழக்கமாகும். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தீமைகளிலிருந்து நீங்குவதற்கும் நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்கும் எவ்விதத்திலும் தடையாக அமைவதில்லை.

இந்த அனர்த்தத்தின் போது புத்தபெருமான் காட்டிய வழியே எமக்குப் பாதுகாப்பாக உள்ளது. வாழ்க்கை நிலையற்றது எனவும், நிலையான எதுவுமில்லை எனவும் போதிக்கும் புத்த போதனையின் உண்மைத் தன்மையினை இந்த அனர்த்த நிலைமையில் முழு உலகும் புரிந்துக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. உள்ளம், உடம்பு, வார்த்தைகள் ஆகிய மூன்று வாயில்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு கூறும் புத்த போதனை இவ்வாறான அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான சிறந்த வழிமுறையாகும்.

ஏனைய நாடுகளுக்கு முன்னரே கோவிட் தொற்றினை வெற்றி கொள்வதற்கு பௌத்தர்கள் பழகிய, பயிற்சி பெற்ற அந்த பணிவொழுக்கமே காரணமாக அமைந்தது என நம்புகிறேன். எனவே வெசாக் காலத்தில் உள்ளம், உடம்பு, வார்த்தைகள் ஆகிய மூன்று வாயில்களையும் ஒழுக்கத்துடன் பேணி, மன அமைதியுடன் வாழ்வினை நோக்கி, மூவுலகிற்கும் கருணை காட்டி, நாம் மும்மணிகளினதும் ஆசியை வேண்டி நிற்போம். அனைத்து உயிர்களும் துன்பங்களின்றி, நோய்நொடிகளின்றி வாழப் பிரார்த்திப்போம்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

2024 ஆம் ஆண்டுக்குள் அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படும் – மஹிந்தானந்த

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஊடாக கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும். அடுத்த ஆண்டு முதல் பெரும்பாலான இறக்குமதி உணவு பொருட்கள்  உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் என கமத்தொழில் அமைச்சர் ...

ஜனாஸாக்களை அடம் பிடித்து எரிப்பது ஏன்? சஜித் கேள்வி

உலகில் 194 நாடுகள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தாலும் அடக்கம் செய்ய அனுமதிக்கின்ற போதிலும் இலங்கையில் மாத்திரம் எரித்தாக வேண்டும் என அரசாங்கம் அடம் பிடிப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

மஹர சம்பவத்துக்கு ‘போதைப் பொருளே’ காரணம்: விமல்

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு அங்கு போதைப் பொருளே காரணம் என விளக்கமளிக்கிறார் விமல் வீரவன்ச. சிறைச்சாலை வளாகத்துக்குள் 'சரத்' எனும் புனைப்பெயரில் அறியப்படும் போதை மாத்திரையை சத்துர எனும் போதைப்பொருள்...

வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள்  பி.சி.ஆர் பரிசோதனை  நடத்தி சடலத்தை கையளிக்க  விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். வேறு நோய்களினால்...

கூரைத்தகடுகள் விநியோக வழக்கிலிருந்து பசில் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்தது. திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2,991 மில்லியன்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here