- Advertisement -
30 C
Colombo
Home World News கொரோனாவால் அழியும் அபாயத்தில் அமேசான் பழங்குடியினர்

கொரோனாவால் அழியும் அபாயத்தில் அமேசான் பழங்குடியினர்

- Advertisement -

21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு மாபெரும் சவாலாக உருவெடுத்திருப்பது, கொரோனா வைரஸ். இதன் ஆக்டோபஸ் கரத்தால் தீண்டப்பட்டு உலக மக்கள் வாழ்வா, சாவா? போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய மோசமான சூழலில், கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் அமேசான் காடுகளில் வாழும் உலகம் தெரியாத அப்பாவி பழங்குடியின மக்களுக்கும் ஆபத்து அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலின் பெரும்பாலான பகுதிகளில்தான் உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் உள்ளன. பசுமை போர்த்தி காட்சியளிக்கும் இந்தக் காடுகளில் 300 க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தை சார்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி உலகத்தோடு இன்னும் தொடர்புக்கே வராதவர்கள். பழமை சிறிதும் குன்றாமல் குடிசை அமைத்து தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து வருபவர்கள். இருப்பினும் கொரோனா வைரசின் கொடிய பார்வை இவர்கள் பக்கமும் திரும்பி உள்ளது. பழமை மாறா பழங்குடியின மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகின்றனர்.

வெளி உலகத்தோடு சிறிதும் பிணைப்பற்ற இவர்களும் வைரஸ் தாக்குதலால் பாதிப்படைவதற்கு யார் காரணம் என்று கேட்டால், நம்மைப் போன்ற நவீன யுக மக்களே!. அமேசான் காடுகளில் மரம் வெட்டுதல், வேட்டையாடுதல், சுரங்கத் தொழில் உள்ளிட்ட பல சட்ட விரோத பணிகள் காலம் காலமாக நடந்து வருகின்றன.

இத்தகைய பணிகளில் ஈடுபடும் வெளியாட்கள் மூலம் பழங்குடியினருக்கு இறக்குமதி செய்யப்படும் கொரோனா, அப்பாவி பழங்குடிகளை பாதித்து வருகிறது. கடந்த ஆண்டு அமேசான் காடுகளில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத காட்டுத் தீ, பழங்குடியின மக்களுக்கு கடுமையான பாதிப்பை விளைவித்தது. அந்த ரணமே இன்னும் ஆறாத நிலையில், புதிதாக பரவி வரும் இந்த நோய்த் தொற்று பூர்வீக பழங்குடியினரின் வாழ்க்கையை பெரிதும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

ஆண்டாண்டு காலமாக அமேசான் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் கொரோனா பாதிப்புக்கு ஆளாவது அதிர்ச்சி அளிப்பதாகவும், வைரஸ் பரவல் அதிகமானால் அவர்களின் இனமே அழிந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் உலகெங்கும் உள்ள சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வைரஸ் பாதிப்பிலிருந்து பழங்குடியினரை பாதுகாக்க பிரேசில் நாட்டு அரசு அக்கறை காட்ட வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரும், சமூக ஆர்வலருமான செபாஸ்டியோ சால்கடோ, அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனோராவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், “ஐரோப்பிய காலனியவாதிகளால் பரப்பப்பட்ட தொற்று நோய்களால் 5 நூற்றாண்டுகளுக்கு முன்பு அமேசான் பழங்குடி இனம் பெரும் அழிவைச் சந்தித்தது. தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியாமல் அமேசான் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் முழுமையாக அழிந்து போகலாம். அவர்களின் பிழைப்புக்கு தீவிர அச்சுறுத்தலாக கொரோனா மாறியுள்ளது. பிரேசில் தனது பூர்வ குடிகளுக்கு கடமைப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், “அமேசான் காடுகளில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை உடனடியாக தடுத்து பழங்குடியினரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்” என்றும் அவர் கூறி உள்ளார்.

சால்கடோ, அமேசான் பழங்குடியினரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியவர். ‘யுனிசெப்’ அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் உள்ளவர். கொரோனா வைரசால் ஒட்டுமொத்த அமேசான் பழங்குடியினர்களும் அழியும் அபாயத்தில் உள்ளதாக அவர் கூறியிருப்பது சமூக ஆர்வலர்களை மேலும் கலக்கம் அடையச் செய்துள்ளது.

கொடிய கொரோனாவால் இன்னும் என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறதோ?

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here