- Advertisement -
31 C
Colombo
Home World News America ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துடன் தொடர்புடைய அதிகாரி மீது 2ஆம் நிலை கொலை குற்றச்சாட்டு!

ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துடன் தொடர்புடைய அதிகாரி மீது 2ஆம் நிலை கொலை குற்றச்சாட்டு!

- Advertisement -

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது இரண்டாம் நிலை கொலை (திட்டமிடப்படாத கொலை) குற்றச்சாட்டாக மாற்றிமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தின்போது நிகழ்விடத்தில் இருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜோர்ஜின் மரணத்திற்கு நேரடி காரணமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியான டெரெக் சா தற்போது பொலிஸ் காவலில் உள்ளார்.

மின்னசோட்டா மாகாண சட்டப்படி, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை கொலை குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்டவர், கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பது அவசியம்.

மூன்றாம் நிலை கொலை குற்றச்சாட்டை பொறுத்தவரை, குற்றம் சுமத்தப்பட்டவர் கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

அதாவது, குற்றஞ்சாட்டப்பட்டவரின் நடவடிக்கைகள் ஆபத்தானவை மற்றும் மனித வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தாலே போதுமானது.

இரண்டாம் நிலை கொலை குற்றம் உறுதிசெய்யப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இது மூன்றாம் நிலை குற்றச்சாட்டை விட 15 ஆண்டுகள் அதிகமாகும்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது பொலிஸாரால் தொடுக்கப்படும் இனவெறி தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும், ஜோர்ஜ் மரணத்திற்கு காரணமான பொலிஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த எட்டு நாட்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

46 வயதான ஜோர்ஜ் ஃப்ளாய்ட், மே 25ஆம் திகதி அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாண தலைநகர் மினியாபொலிஸில், பொலிஸ் அதிகாரி சாவின் பிடியில் எட்டு நிமிடம் 46 நொடிகளுக்கு கழுத்து நெறிபட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

திட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது – கல்வியமைச்சர்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடத்த முடியாது என்று கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட திகதிகளில் பரீட்சை ஆரம்பமாவதற்கு 06 வாரங்களுக்கு முன்னதாக புதிய...

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாதிருப்பதை தடுக்க விசேட திட்டம்

போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகாமல் இருப்பதை தடுப்பதற்கு உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பயன்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படத்தவுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். அந்தவகையில் பாராளுமன்றத்தில் 2021...

12 மணி நேரத்தில் சூறாவளிக்கு சாத்தியம்…..

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம், ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில்...

வரலாற்றில் முதற் தடவையாக காணொளி மூலம் அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர். கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. கொவிட்...

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கிடைத்தவுடன், இலங்கையில் 4.2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும்’

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சகல விதமான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் வைரஸ் பரவலில் இருந்து மீள எமது மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதே எமது அடுத்த இலக்காக உள்ளது....

Related News