- Advertisement -
31 C
Colombo
Home Entertainment குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல – பிரசன்னா

குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல – பிரசன்னா

- Advertisement -

நடிகர் பிரசன்னா சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக உங்களில் எத்தனை பேருக்கு தோன்றுகிறது என்று கேள்வி எழுப்பினார். பிரசன்னாவின் இந்த ட்வீட் பெரும் விவாதத்தை உண்டாக்கியது.

இது தொடர்பாக மின்சார வாரியம் இன்று விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் மார்ச் மாதத்துக்கான கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை என்றும், மின் கட்டணம் அதிகமானதுக்குமான காரணத்தையும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மின்சார வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல என்று கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

உண்மைதான்‌! ரீடிங்‌ எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள்‌ பொதுவாக கட்டணம்‌ செலுத்தும்‌ பழக்கமுள்ள நான்‌, மார்ச்‌ மாதம்‌ ரீடிங்‌ எடுக்காததால்‌ கட்டணம்‌ செலுத்த தவறியது உண்மைதான்‌.

அதே அளவு இதற்குமுன்‌ காலதாமதமின்றி தவறாமல்‌ கட்டணம்‌ செலுத்தி வருகிறேன்‌ என்பதும்‌ உண்மை. வாரியம்‌ சொல்வது போல்‌ நான்கு மாத கணக்கீட்டாலும்‌, மார்ச்‌ மாத கட்டணம்‌ சேர்த்தும்‌ எனக்கு தனிப்பட்ட கட்டணம்‌ கூடுதலாக வந்திருக்கலாம்‌.

என்‌ தனிப்பட்ட பிரச்சினையாக இதை நான்‌ எழுப்பவில்லை. அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர்‌ நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என்‌ ட்வீட்‌.

மின்வாரியத்தைக் குறை சொல்வதோ, குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும்‌ வந்திருப்பதாக சொல்லப்படும்‌ அதிக கட்டணம்‌ குறித்த கவன ஈர்ப்பும்‌ , அதன்மூலம்‌ வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில்‌ ஏதாவது முறையில்‌ இப் பிரச்சினையில்‌ மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம்‌ செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின்‌ மிக்க உதவியாக இருக்கும்‌ என்பதே என்‌ வேண்டுகோள்‌.

நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும்‌ அதையே நான்‌ குறிப்பிட்டிருக்கிறேன்‌. ஊரடங்கு காலங்களில்‌ மருத்துவ, காவல்‌, சுகாதார துறைகள்‌ போலவே மின்வாரிய ஊழியர்களும்‌, அதிகாரிகளும்‌ அயராது பணியாற்றியிருக்கிறார்கள்‌ என்பதை நன்றியோடு பாராட்டவும்‌ நான்‌ மறக்கவில்லை.

மற்றபடி வாரியத்தையோ அரசையோ குறைகூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாத போதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனநோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன்‌. மக்கள்‌ மீது விழுந்திருக்கும்‌ இந்த எதிர்பாரா சுமையை வாரியமும்‌ அரசும்‌ இறக்கி வைக்குமென எதிர்பார்க்கிறேன்‌.

பிகு: என்‌ வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும்‌ எந்த நிலுவையுமின்றி இன்று காலை நான்‌ செலுத்திவிட்டேன்‌”. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அரச பஸ்களில் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு – இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!

இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்தின் மூலம் அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000 ரூபாவும் இழப்பீடாக வழங்குவதற்கு இலங்கை...

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சி

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மீன் நுகர்வு இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களின் முன்னிலையில் பச்சை மீனை...

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும்...

மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான திகதியை அறிவித்தார் பஷில்..!

வரவு - செலவு திட்டத்தை அரசியல் இலாபத்துக்காக எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  பாதீடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்  கூட்டம் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை...

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன்...

Related News