- Advertisement -
26 C
Colombo
Home Local News அமெரிக்க இராஜதந்திரி பி.சி.ஆர் சோதனையை மறுக்கவில்லை: அதிகாரிகள் வலியுறுத்து

அமெரிக்க இராஜதந்திரி பி.சி.ஆர் சோதனையை மறுக்கவில்லை: அதிகாரிகள் வலியுறுத்து

- Advertisement -

இலங்கைக்கு கடந்த முதலாம் திகதி வருகை தந்த அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் பி.சி.ஆர் சோதனைக்கு உட்பட மறுத்தார் என்ற தகவலில் உண்மையில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த ராஜதந்திரி பீசீஆர் பரிசோதனையை நிராகரித்து நாட்டுக்குள் பிரவேசித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஜி.ஏ. சந்திரஸ்ரீ, இராஜதந்திரிகளுக்கான பி.சி.ஆர் சோதனைகள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் உறுதியாக தெரியாததால், ஜூன் 1 ஆம் குறித்த ராஜதந்திர கட்டுநாயக்க வானூர்தி தளத்துக்கு வந்த பின்னர் அவரை வானூர்தி நிலையத்திலேயே தங்கிஇருக்குமாறு கேட்டுக் கொண்டதாக சந்திரசிறி கூறினார்.

இதன்படி இராஜதந்திரி பல மணிநேரம் வானூர்தி நிலையத்தில் தங்கியிருந்துள்ளார்.

இதன்போது இராஜதந்திரியுடன் கையாளும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து வானூர்தி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்துக்கொண்டனர் என்றும் சந்திரசிரி கூறினார்.

இந்தநிலையில் தமக்கு பி.சி.ஆர் சோதனை தேவையில்லை என்று கூறி ஒரு ஆவணத்தை அமெரிக்க இராஜதந்திரி இலங்கை அதிகாரிகளிடம் வழங்கியதாகவும் சந்திரஸ்ரீ குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் நான்சி வான்ஹார்ன் கூறுகையில்,

அமெரிக்க இராஜதந்திரிகள், இலங்கையின் கொரோனா வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜதந்திரிகளின் இலங்கைக்கான வருகை, இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்குவதாகவும், இது இலங்கை மற்றும் பிற நாடுகளின் இராஜதந்திரிகள் அமெரிக்காவிற்கு வருவதற்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...

Related News