- Advertisement -
28 C
Colombo
Home Local News வருமான வரி  செலுத்தாதோருக்கு அபராத தொகை இல்லை : பந்துல குணவர்தன!

வருமான வரி  செலுத்தாதோருக்கு அபராத தொகை இல்லை : பந்துல குணவர்தன!

- Advertisement -

இந்த வருடம் ஜூன் மாதம் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வருமான வரி  செலுத்தாதோருக்கு அபராத தொகை விதிக்கப்படாது என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்கள் குறித்து அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகள் சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த தொழில்துறைகளை கொண்டு நடத்த முடியாத நிலை காணப்படுவதால் நான்கு வீத நிவாரண வட்டி விகிதத்தில் கடன் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
எவ்வாறாயினும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக பலருக்கும் குறித்த நிவாரண வட்டி வீதத்தில் கடன் கிடைக்கவில்லை.
மத்திய வங்கியை குறித்த நிவாரணத்திற்காக 50 பில்லியன் ரூபாய்களே முன்னதாக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த நிதியை 150 பில்லியன்களாக அதிகரிக்க ஜனாதிபதி அமைச்சரவைக்கு பத்திரம் முன்வைத்துள்ளார்.
இதேவேளை வரி செலுத்தாதோருக்கு தேசிய வருமான திணைக்களம் அபராதத் தொகையை விதிப்பது வழமையாகும்.
எனினும் நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில் வருமான  வரி செலுத்தாதோருக்கு எந்தவித அபராத தொகையையும் செலுத்த தேவையில்லை என ஜனாதிபதி முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய இந்த வருடம் ஜூன் மாதம் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வருமான வரி தொடர்பான அபராதங்களை விதிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அமைச்சர்  பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News