- Advertisement -
33 C
Colombo
Home Local News கழிவுகளால் நிரம்பியுள்ள கல்கிசை கடற்கரை

கழிவுகளால் நிரம்பியுள்ள கல்கிசை கடற்கரை

- Advertisement -

அதிகக் கழிவுகளும் குப்பை கூளங்களும் நிறைந்து கல்கிசை கடற்கரை இன்று காட்சியளித்தது.

பருவ மாற்றத்தின் போது கடல் அலைகளால் கழிவுகள் கரையொதுங்குவது வழமையாகும். எனினும், இம்முறை வழமைக்கு மாறாக அதிகளவான கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இங்கையிலுள்ள கடற்கரைகளில் கல்கிசை கடற்கரைக்கு தனிச்சிறப்புண்டு.

கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அங்கே குப்பைகளைப் போடக்கூடாது என்பதை அறிவுறுத்தும் வகையில் அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடற்கரையை துப்புரவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என தெஹிவளை-கல்கிசை மேயர் ஸ்டான்லி டயஸிடம் வினவியபோது, விசேட ஊரடங்கு சட்ட காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஊழியர்களை ஈடுபடுத்தி கடற்கரையை விரைவாக துப்புரவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை, கல்கிசை கடற்கரை பகுதியில் மணல் சேகரிக்கும் திட்டத்தில் உரிய பயனை பெற முடியவில்லை என புதிய அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பட்டியாரச்சி, கடல்வாழ் உயிரியல் விஞ்ஞானி ஆஷா டி வாஸ் மற்றும் நாடியா அஸ்மி ஆகியோர் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

‘கல்கிசை கடற்கரையில் அனர்த்தம்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், போதியளவு திட்டமிடலின்றி இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, அடிப்படை கடற்கரை பொறியியல் மூலோபாயங்களையேனும் பொருட்படுத்தாமல் செயற்றிட்டப் பணிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள்  பி.சி.ஆர் பரிசோதனை  நடத்தி சடலத்தை கையளிக்க  விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். வேறு நோய்களினால்...

கூரைத்தகடுகள் விநியோக வழக்கிலிருந்து பசில் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்தது. திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2,991 மில்லியன்...

வீதி அபிவிருத்தி பணிகள் நேற்று முதல் ஆரம்பம்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு வருட பதவி பூர்த்தியினை முன்னிட்டு 341 உள்ளுராட்சி நிறுவனங்களிலுள்ள 341 வீதி அபிவிருத்தி பணிகள் நாடு முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஜா-எல, கந்தானை தெரசா...

349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த  மேலும் 349 இலங்கையர்கள் இன்று(30) நாடு திரும்பியுள்ளனர். தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அத்துடன், கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானின்...

‘கொரோனா இல்லாத எத்தனை ஜனாஸாக்களை எரித்தீர்கள்?’

கொவிட்-19 தொற்றாமல் மரணித்த எத்தனை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்துள்ளீர்கள் என எதிர்க்கட்சித் ​தலைவர் சஜித் பிரேமதாஸ, சுகாதார அமைச்சரிடம் சபையில் ​கேள்வியை எழுப்பினார்.

Related News