- Advertisement -
29 C
Colombo
Home World News கொரோனாவால் உலக நாடுகள் பலவீனமடைந்ததை பயன்படுத்த சீனா முயற்சி.

கொரோனாவால் உலக நாடுகள் பலவீனமடைந்ததை பயன்படுத்த சீனா முயற்சி.

- Advertisement -
கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்து உள்ளது. இச் சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தென்சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனா முயற்சிக்கிறது. பசுபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான தென் சீனக்கடல் வழியாகதான் உலக கடல் போக்குவரத்தின் மூன்றில் ஒரு பங்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
$3 Trillion ( சுமார் 580 லட்சம் கோடி ரூபா ) மதிப்புள்ள வர்த்தக பொருட்கள் இந்த கடல் வழியாக வருடம் தோறும் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் தென்சீனக் கடலுக்கு அடியில் எண்ணெய், இயற்கை எரிவாயு, உள்ளிட்டவை அதிகளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடல் பகுதிக்கு சீனா பல வருடமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. அதே போல் அந்த கடல் பகுதியிலுள்ள தீவுகளுக்கு இந்தோனேசியா, வியட்னாம், மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. இந்த சூழலில் கொரோனா வைரஸின் பக்கம் உலக நாடுகள் திரும்பி இருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தென்சீனக் கடலை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சீன அரசு ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவின் அத்துமீறல்கள் குறித்து மார்ச் மாத இறுதியில் ஐ.நாவிடம் வியட்னாம் முறைப்பாடளித்தது.
முறைப்பாடளித்த தெரிவித்த சில நாட்களில் (April மாதம் 2ம் திகதி ) வியட்னாமை சேர்ந்த மீன்பிடி படகொன்றை சீன ரோந்து கப்பல் மோதி மூழ்கடித்தது. இது குறித்து விளக்கமளித்த சீன அரசாங்கம் தங்களுக்கு சொந்தமான கடல்பகுதியில் வியட்னாம் படகு அத்துமீறி நுழைந்ததாகவும், தங்கள் கப்பல் மீது மோதும் வகையில் வந்ததால் அந்த படகை மூழ்கடித்ததாகவும் தெரிவித்தது. அதனை தொடர்ந்து April மாதம் 11ம் திகதி தாய்வானுக்கு சில மைல் கடல் தொலைவில் சீன போர் விமானங்கள் பயிற்சி மேற்கொண்டன. மேலும் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள 25 தீவுகள், கடல் திட்டுக்கள் உள்ளிட்டவற்றுக்கு கடந்த மாதம் சீன மொழியில் பெயரும் சூட்டியது சீன அரசாங்கம்.
தென்சீன கடல் பகுதியை போலவே கிழக்கு சீன கடல் பகுதியையும், ஆக்கிரமிக்க சீனா திட்டம் தீட்டியது. அதன் வெளிப்பாடாக அங்குள்ள தீவு பகுதிக்கும் தனது கப்பலை அனுப்பி வைத்தது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதுமட்டுமல்லாமல் தென்சீன கடல் விவகாரத்தில் மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சீண்டும் வகையிலும் சீனா அரசாங்கம் செயல்பட்டது. சீனாவின் அத்துமீறல்கள் அதிகரிக்க தொடங்கியதால் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தென்சீன கடல் பகுதிக்குள் கடந்த மாதம் தனது போர் கப்பல்களை கொண்டு வந்து நிறுத்தியது அமெரிக்கா. துணைக்கு அவுஸ்திரேலிய போர்க்கப்பலும் வந்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இருப்பினும் அமெரிக்காவின் போர் கப்பல்களை விரட்டி அடித்து விட்டதாக சீனா தெரிவித்தது.
தென்சீனக் கடலில் சீனாவின் அத்துமீறல்கள் தற்போதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. கொரோனா வைரஸின் பாதிப்பால் பல நாடுகள் பலவீனம் அடைந்துள்ள நிலையில் சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
M.J.M பாரிஸ்
- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here