- Advertisement -
28 C
Colombo
Home Must Read பொள்ளாச்சி போல் பெண்களை அடித்து கதறவிட்டு ரசித்த காமப்பிரியன் காசி! -ப்ளாக்மெயிலில் 7 கூட்டாளிகள்!

பொள்ளாச்சி போல் பெண்களை அடித்து கதறவிட்டு ரசித்த காமப்பிரியன் காசி! -ப்ளாக்மெயிலில் 7 கூட்டாளிகள்!

- Advertisement -

சென்னை, பெங்களூரு, கோவை, நாகர் கோவில் போன்ற பகுதிகளில், பள்ளி, கல்லூரி மாணவிகள், பெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்கள், குடும்பப் பெண்கள் போன்றோரை, தன் வலையில் வீழ்த்தி, ஆபாச வீடியோவை வைத்து ‘பிளாக்மெயில்’ செய்து பணம் பறித்தது, சுஜி என்ற காசி மட்டுமல்ல… மேலும் சில கூட்டாளிகளும்தான்… என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வர, டைசன் ஜினோ என்பவன் தற்போது பிடிபட்டிருக்கிறான்.

சிக்கிய ‘வீடியோ’ கூட்டாளி!

தன் மீது முதலில் புகார் கொடுத்த பெண் மருத்துவர், தனது செல்போன் நம்பரை ‘பிளாக்’ செய்துவிட, டைசன் ஜினோ நம்பரிலிருந்து அந்த மருத்துவரிடம் பேசவும், வாட்ஸ்-ஆப் மூலம் தகவல் அனுப்பவும் முயற்சித்திருக் கிறான் காசி. அதுபோல், காவல் துறையினர் காசியிடமிருந்து செல் போனை கைப்பற்றியதும், அதிக தடவை டைசன் ஜினோவிட மிருந்துதான் அழைப்புகள் வந்தி ருக்கின்றன. விசாரணையின்போது காசி, பிளாக்மெயில் போட்டோக் கள் மற்றும் வீடியோக்களை சவுண்ட் எபெக்ட்டுடன் எடிட் செய்து தந்தது டைசன் ஜினோ தான் என்று வாக்குமூலம் அளித் திருக்கிறான். இந்த டைசன் ஜினோ கூட, செய்த வேலைக்கு காசியிடம் பணம் மட்டுமே வாங்கியிருக்கிறான். மற்ற 6 கூட்டாளிகள் அப்படி கிடையாது. காசியோடு பழகிய பெண்கள், தங்களுக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து காரியத்தை சாதித்திருக்கின்றனர். நிர்ப்பந்தித்து பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு, அந்தப் பெண்களை மிரட்டி, அவரவர் நண்பர்களுக்கு “பாஸ்’ செய்தபடியே இருந்திருக்கின்றனர்.

கட்டி வைத்து அடித்து கதறலை ரசித்த வக்கிரம்!
kk
ஏதோ ஒரு குற்றம் சுமத்தி, தன்னிடம் பழகிய பெண்களைக் கட்டிவைத்து அடிப்பதும், அவர்களின் கதறலைக் கேட்டு காமுறுவதும், காசியின் வக்கிர குணமாக இருந்திருக்கிறது. ஒரு பெண்ணுடன் அவன் பேசியதாக ‘லீக்’ ஆகியிருக் கும் ஆடியோவிலேயே, “நீ கெட்டவனு ஒருத்தன போன் பண்ணி பேச வைக்கட்டா…’’ என்று கூறும் காசி, “அதுக்குத்தானே அடி வாங்கின என்கிட்ட…’’ என்று ஜம்பம் அடிக்கிறான். இன்னொரு ஆடியோவில், டைசன் ஜினோவிடம் “ரூபாயும் தந்து ரோட்டுல வந்து நிக்கிறாளுக. அந்தளவு நம்மகிட்ட அடிக்டா இருக்கிறாளுக…’ என்று தன்னிடம் நெருங்கிய பெண்களை இழிவுபடுத்திப் பேசுகிறான்.

இன்னொரு நண்பனிடம், ’””ஒவ்வொருத்தியும் தர்ற கம்ப் ளைண்ட வச்சி ஒரு நாளைக்கு 5 பேர்கிட்ட சண்டை போடலாம். அப்படி நான் செய்யல. பாதாம், பிஸ்தா சாப்பிட்டு என் உடம்ப வளர்த்து வச்சிருக்கேன். எவனாச்சும் தட்டி, நான் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினாலும் எனக்குத்தான் நஷ்டம். அப்புறம், நான் இருக்கிற போட்டோக்களை சட்டம் ஏற்றுக்கொள்ளாது. எந்த நீதிமன்றமும், போட்டோ ஃபைல், வாய்ஸ் ஃபைல்.. இந்த ரெண்டயும் ஒத்துக்கொள்ளாது” என்று சட்டம் பேசுகிறான்.

துவண்டுபோன ஜிம் பாடி!
dd
கஸ்டடியில் இருந்த காசியை, என்ன காரணத்துக்காகவோ, முதலில் செல்லப்பிள்ளை போல் காவல்துறை கவனித்துக்கொள்ள, “எனக்கு தூக்கம் வருகிறது.. என்னை தூங்கவிடுங்க…’ என்று கொஞ்சியிருக் கிறான். பெண்கள் அழைக்கும்போது மட்டும்தான் நீ போவாயா? எல்லா பெண்களும் பேஸ்புக், இன்ஸ் டாகிராம் மூலம்தான் உனக்கு பழக்கம் ஆனார்களா? உனக்கு நெருக்கம் ஆகிவிட்ட பெண்களே, பிற பெண்களோடு உனக்கு தொடர்பினை ஏற்படுத்தி தந்தார்களா?’’என்றெல்லாம் கேள்விகளால் துளைக்க… “என்ன சார்? இவ்வளவு கேள்விகள் கேட்கிறீங்க? இதற்கெல்லாம் என்கிட்ட பதில் இல்ல. ரொம்ப எரிச்சலா வருது…’’என்று கோபித்திருக்கிறான்.

விசாரணைக்கு அவன் ஒத்துழைக்காதது, எஸ்.பி. ஸ்ரீநாத்தின் கவனத்துக்குச் செல்ல, தென் தாமரைக்குளம் போலீஸ் குடியிருப்புக்கு விரைந் தார். அப்புறம்தான், விசாரணை வேகமெடுத்தது. காக்கிகளின் சிறப்பு கவனிப்புக்கு முன்னால், அவனது “ஜிம் பாடி’ துவண்டு போனது. எத்தனை பேர் குடும்பத்தை தூங்க விடாம பண்ணிருக்க… உனக்கு தூக்கம் கேட் கிறதா?” என்று அவர்கள் தொடர்ந்து விரைப்பு காட்ட, செல் போனிலும் லேப் டாப்பிலும், தான் சேகரித்து வைத்திருந்த வீடி யோக்களின் பின்னணியை விவரித்திருக்கிறான்.

மதுபோதையில் ஆடிய மாணவிகள்!

“”இந்த நாயைச் சுட்டுக் கொல்ல ணும்…”’என்று ஆவேசப் பட்டார், காவல்துறை நண்பர் ஒருவர். காரணம் – அவன் பதிவு செய்திருந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்திருக் கின்றன.

வி.ஐ.பி.க்களின் குடும்பத்தைச் சேர்ந்த அந்த 5 பேரும் பள்ளி மாணவிகள், காசியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு பழகியிருக்கின்றனர். வேண்டாம்… வேண்டாம்… என்று கெஞ்சிய மாணவிகளைக் கட்டா யப்படுத்தி நிர்வாணமாக்கி, வெளிநாட்டு மதுவைக் குடிக்க வைத்து, தொடர்ந்து போதையேற்றி, ஆட வைத்திருக்கிறான்.ddவீடியோ கால் வில்லங்க டெக்னிக்!

தன்னிடம் பழகிய பெண் களிடம் போர்னோ’ வீடியோக் களைக் காட்டி, அதில் உள்ளதுபோல் நடந்துகொள்ள வேண்டுமென்று வற்புறுத்தி பணிய வைத்திருக்கிறான். நிச்சயம் அவர்கள் குடும்பப் பெண்களாகத்தான் இருப்பார்கள். அவர்களின் உடலை, நுரை பொங்கும் பீரால் பீய்ச்சியடித்து, முழுவதுமாக நனையச் செய்து, ஒரு நாய் போல் நடந்துகொள்கிறான்.

விபரமான பெண்களும்கூட, அவன் பேச்சை நம்பி, அவன் பார்ப்பதற்காக, தங்களின் ஆடை களைக் களைந்து, வீடியோவில் பதிவாகியுள்ளனர். அதற்கென்றே, காசி ஒரு தந்திரத்தைக் கையாண்டி ருக்கிறான். நாகர்கோவில் – வடசேரியில், “ஃபிட்னஸ் ஒன்’ என்ற பெயரில் இயங்கிவருகிறது ஒரு ஜிம். பெரும் வி.ஐ.பி.க்கள்தான் அதன் வாடிக்கையாளர்கள். ஆண்கள் குறைவாக வரும் மாலை நேரத்தில் அங்கு பெண்கள் வருவார்கள். காசியும் அப்போதுதான் வருவான். பயிற்சியில் ஈடுபடாமல், காசியுடன் பேசி பொழுதைக் கழிப்பதற்கென்றே சில பெண்கள் வந்திருக்கின்றனர். அந்தப் பழக்கத்தை வைத்து, சில பெரிய வீட்டுப் பெண்களின் அழைப்பின் பேரில், “ஆக்டிங் டிரைவர்’ ஆகவும் செயல்பட்டிருக்கிறான்.

கொங்கு பகுதியைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் ஒருவரின் இளம் மனைவி முகநூலில் அறிமுகமாகி, காசியின் “சிக்ஸ் பேக்’’ உடலமைப்பினை பார்த்து கிறங்கிப் போனார். அந்தப் பெண்ணிடம் “கேரளா லேடீஸ் நிறைய பேருக்கு ஃபிட்னஸ் சம்பந்தமா டிப்ஸ் கொடுத்திருக்கேன். நான் சொன்னபடி நடந்ததுனால, இப்ப அவங்க பாடி ஸ்ட்ரக்சர்’செமயா இருக்கு. உங்க உடம்புல எந்தெந்த இடத்துல தேவையில்லாத சதை இருக்குன்னு நீங்க காமிச்சாதான் நான் பார்த்து டிப்ஸ் தரமுடியும்’’ என்றிருக்கிறான். அந்தப் பெண்ணும் உடலழகை மெருகேற்றுவதற்காக, வீடியோ காலில் தன் உடல் பாகங்களைக் காண்பித்திருக்கிறாள். உடனே இவன், “உங்கள நேர்ல பார்க்கணுமே’ என்று கிளம்பிச் சென்று, நகைக்கடை அதிபரின் படுக்கையறையை தனதாக்கியதோடு, அங்கு நடந்ததை வீடியோவும் எடுத்திருக்கிறான். அந்தப் பெண்ணிடமிருந்து பறித்ததுதான், அவன் கழுத்தில் கெட்டிச் செயினாக வும், கையில் பிரேஸ்லெட்டாகவும், விரல்களில் மோதிரமாகவும் மின்னியிருக்கின்றன.

இப்படி ‘ஓபன்’ஆகப் பேசத் துணிந்த பெண்களில், யார் யாருடைய உடலமைப்பு தன்னைத் தூண்டுகிறதோ, அவர்களைத் தேர்வு செய்து, நேரடி யாகச் சந்தித்திருக்கிறான். உடலால் தன்னை ஈர்க்காத பெண்களை நெருங்காவிட்டாலும், அவர்களது நிர்வாணம் இவனது மிரட்டலுக்குப் பயன்பட்டு, பணமழை பொழிய வைத்திருக்கிறது.

ஆர்ட்டின் சிம்பல் ரகசியம்!

நீதிமன்றத்தில் காசியை ஆஜர் படுத்தியபோது, பத்திரிக்கையாளர்களிடம் ஆர்ட்டின் சிம்பல்’ காட்டினான் அல்லவா? அவன் ஏன் இப்படி செய்தான் என்பதை, அவனால் பாதிக்கப்பட்ட பெண்களே முழுவதுமாக அறிவார்களாம். தொப்புளுக்கு கீழே ஆர்ட்டின் சிம்பலை அவன் டாட்டூவாக குத்தியிருக்கிறான். அவனுக்கு மிகவும் பிடித்த பெண்களையும், அவர்களின் பின்பக்க இடுப்பில், 10 ரூபாய் நாண யம் அளவில், ஆர்ட்டின் சிம்பலை டாட்டூவாக குத்தச் செய்திருக்கிறான். அவர்களெல்லாம் தனக்கு எதிராகக் கிளம்பிவிடக் கூடாது என்பதற்காகவே, “உங்கள் ரகசியம் என் கையில்’ என்று ஆர்ட்டின் சிம்பல் காட்டி எச்சரித்திருக்கிறான். இந்தச் செய்கை, அவனுடன் பழகிய இளம் பெண்களிலிருந்து திருமணம் ஆனவர்கள் வரை, பலரையும் நடுங்க வைத்திருக்கிறது.

ரகசியம் காப்பது நல்லது!

புகார்தாரரின் வழக்கறிஞர் புருஷோத்தமன் நம்மிடம் “”இந்த வழக்கில் ரகசியம்தான் மிக முக்கியம். யாரெல்லாம் எந்த மாதிரி புகார் அளித்தார்கள் என்பது வெளியில் தெரிந்துவிடக் கூடாது. ஏனென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள், தாங்கள் ஏமாந்தது வெளியில் தெரியக் கூடாது. அதே நேரத்தில், தங்களை ஏமாற்றியவன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பதுதான். ஒருவேளை, புகார் கொடுத்தவர்கள் குறித்த விபரங்கள் வெளியே தெரிந்துவிட்டால், பிறகு யாரும் புகார் கொடுக்க வரமாட்டார்கள். தற்போது, காசிக்கு எதிராக நிறைய புகார்கள் பதிவாகியிருக்கும் போல. இந்த விபரத்தை எங்களிடம் கூட காவல்துறையினர் சொல்ல மறுத்துவிட்டார்கள். இதுவும் நல்லதுக்குத்தான்” ’என்றார்.

போகப்போக பொள்ளாச்சி போல!

காவல்துறை உயரதிகாரி ஒருவர் “இதுபோன்ற வழக்குகளில் ஆரம்பக்கட்ட விசாரணை விறுவிறுவென்று சரியாகச் செல்வது போலவே தெரியும். போகப்போகத்தான் வில்லங்கம் அத்தனையும் நடக்கும். ஆளும்கட்சி முக்கிய புள்ளியின் தலையீட்டில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் விஷயத்தில், அப்போது எஸ்.பி.யாக இருந்த பாண்டியராஜன் எப்படி நடந்துகொண்டார்? 1100 வீடியோக்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த எஸ்.பி.யோ, “”மொத்தமே 3 வீடியோக்கள்தான்.. வேறு ஏதாவது வீடியோ இருப்பதாகச் சொன்னால், வழக்கு போடுவோம்”’என்றார். கோவை கலெக்டர் ராசாமணியோ, “””அப்படிச் சொல்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வோம்…”’ என்று பேசி, நடந்த குற்றங்களை மறைப்பதில் ஆர்வம் காட்டினார்.

நாகர்கோவில் காசி வழக்கிலும், நிறைய ஆபாச வீடியோக்கள் உள்ளன. வி.ஐ.பி.க்கள் வீட்டுப் பெண்களின் பெயர் அடிபடுகிறது. காசியிடம், உன்னோடு பழகிய பெண்கள் யார் யாரென்று, அத்தனை விபரங்களையும் கறந்து விடுவார்கள். திரைமறைவில், ‘இந்தக் கரும மெல்லாம் வெளியே தெரிந்தால்..?’ என்று சம்பந்தப்பட்டவர்களிடம் பேரம் நடத்துவார்கள். ‘உங்களையெல்லாம் காட்டிக் கொடுக்கமாட்டேன்…’ என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிடம் உத்தரவாதம் அளித்து, விசாரணை வளை யத்தில் இருந்தபோது, கொடூர நண்பர்கள் மூலம் காசி சம்பாதித்த பணமே ஒரு கோடியைத் தாண்டிவிட்டது என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. ஆளும்கட்சி அரசியல் பின்னணி உள்ளதால், காசியின் முக்கிய கூட்டாளிகளை காவல்துறை நெருங்கவே இல்லை. பணமே பிரதானம் என்ற நோக்கத்தில் உள்ள சில அதிகாரிகள், ஒவ்வொரு வீடியோ அழிப்புக்கும் கணிசமாகக் கறந்துவிடுவார்கள் என்று சந்தேகம் கிளப்பினார்.

குற்றவாளிகளுக்கு அரசும் காவல்துறையும் உடந்தையாகக்கூடாது. அப்படியானால், குடிகாரர்களை மதுப்பிரியர்களாக மரியாதை தரும் மாநிலத்தில், பாலியல் வன்கொடுமையும் ப்ளாக்மெயிலும் செய்யும் இழிபிறவி காசிக்கு “காமப்பிரியன்’ என்ற மரியாதை கிடைத்துவிடும் அபாயம் உள்ளது. அது இன்னும் பல பெண்களுக்கு ஆபத்தாகிவிடும்.

நன்றி – நக்கீரன்

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...

Related News

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here