- Advertisement -
26 C
Colombo
Home World News பிரிட்டனின் “ஃபேர்லோ” திட்டம் – “ நம்பியிருக்கும் ஊழியர்களைக் கைவிட மாட்டேன் – விரிவுபடுத்துகிறேன்”

பிரிட்டனின் “ஃபேர்லோ” திட்டம் – “ நம்பியிருக்கும் ஊழியர்களைக் கைவிட மாட்டேன் – விரிவுபடுத்துகிறேன்”

- Advertisement -

கோரோனா பெருந் தொற்றின் தாக்கங்களால் பணிக்குச் செல்லாமல் விடுப்பில் இருக்கும் பணியாளர்களின் ஊதியத்தில் 80 விகிதத்தை (80%) வழங்கும் பிரித்தானியாவின் திட்டமான “ஃபேர்லோ” (furloughed workers) வானது ஒக்டோபர் வரை நீட்டிக்கப்படும் என அத்திட்டத்தின் மூலகர்த்தாவும்  திறைசேரியின் தலைவருமான (chancellor) ரிசி சுனக் தெரிவித்துள்ளார்.

£2500 வரை மாத ஊதியமாகப் பெறும் ஊழியர்கள் தமது ஊதியத்தில் 80% இனை தொடர்ந்தும் பெறுவார்கள் என சுனக் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இத்திட்டத்தின் செலவை நிறுவனங்களும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கவேண்டும் என அரசாங்கம் கேட்குமென அவர் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

மாதம் ஒன்றிற்கு £14 மில்லியன் செலவாகும் இத்திட்டத்தின் கீழ் மொத்த ஊழியர்களின் கால் பகுதியாக அமையும் சுமார் 7.5 மில்லியன் பேர் உள்ளனர்.

furloughed திட்டத்தின் கீழ் விடுப்பில் உள்ளவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதை ஆதரிக்கும், அதிக நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய இந்தத் திட்டம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து நாட்டின் அனைத்துத் துறைகளுக்கும் பிராந்தியங்களுக்கும் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தினைப் பயன்படுத்தும் தொழில்கொள்வோர்கள் இத்திட்டத்தின் கீழ் தற்போது உள்ள தமது பணியாளர்களை பகுதிநேரவேலைக்கு அமர்த்துவதற்கு இடம்கொடுக்கும் நெகிழ்வுத்தன்மையுடனும் இத்திட்டம் தொடரும் எனவும், “இந்தத் திட்டத்தை நம்பியிருக்கும் ஊழியர்களைக் கைவிட மாட்டேன் என்பதால் நான் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துகிறேன்”, என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 100 இற்கும் மேற்பட்ட பணியாட்களைக் குறைக்க விரும்பும் எந்தவொரு நிறுவனமும் 45 நாட்கள் ஆலோசனையை நடத்த வேண்டும். இந்தத் திட்டம் ஏலவே குறிப்பிட்டதன் பிரகாரம், இத்திட்டத்தினை தொழில்கொள்வோர் தொடங்குவதற்கான கடைசித் திகதி யூன் 18 ஆம் திகதி முடிவடைய முன்பானதான மே- 18 ஆம் திகதி என தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த நிலையில் இத்திட்டம் நீடிக்கப்பட்டால், சிலர் இந்தத் திட்டத்திற்கு அடிமையாகக் கூடுமென சொல்லப்படும் விமர்சனங்களையும் திறைசேரிச் செயலர் ரிசி சுனக் மறுத்துரைத்துள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here