- Advertisement -
31 C
Colombo
Home Local News மழைக்கு மத்தியிலும் மதுபான சாலைகளில் அலைமோதும் மதுபிரியர்கள்

மழைக்கு மத்தியிலும் மதுபான சாலைகளில் அலைமோதும் மதுபிரியர்கள்

- Advertisement -

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுபான சாலைகளுக்கு முன்பாக மக்கள் கூட்டம் அலைமோதுகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை மதுபான சாலைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் கடும் நிபந்தனைகளுடன் மதுபானசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மதுபான நிலையங்களில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் சமூக இடைவெளியினை பின்பற்றி இவ்வாறு மதுபானத்தை கொள்வனவு செய்து வருகின்றனர்.

மதுபான உரிமையாளர்களினால் மதுபான நிலையங்களுக்குள் ஒவ்வொருவராக செல்லவே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களைவிடவும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது.

இதேவேளை, சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் மதுபானம் வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டு செயற்பட்டதால் மலையகத்தின் சில பகுதிகளில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

குறிப்பாக ஹட்டன் நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் தலையிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காக கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் தொடர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் சமூக இடைவெளி உட்பட பல காரணங்களைக் கருத்திற்கொண்டு மதுபான சாலைகளை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அரச பஸ்களில் பயணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு – இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!

இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்தின் மூலம் அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000 ரூபாவும் இழப்பீடாக வழங்குவதற்கு இலங்கை...

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சி

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மீன் நுகர்வு இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களின் முன்னிலையில் பச்சை மீனை...

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும்...

மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான திகதியை அறிவித்தார் பஷில்..!

வரவு - செலவு திட்டத்தை அரசியல் இலாபத்துக்காக எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  பாதீடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்  கூட்டம் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை...

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here