- Advertisement -
31 C
Colombo
Home Local News கருணாவை கைது செய்ய உத்தரவிடகோரி மனு! சட்டமா அதிபரின் அறிவிப்பு

கருணாவை கைது செய்ய உத்தரவிடகோரி மனு! சட்டமா அதிபரின் அறிவிப்பு

- Advertisement -

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் ஆரம்ப ஆட்சேபனைகளை தெரிவிக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

கருணா அம்மானை கைது செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட கோரி கடுவெல நகரசபை உறுப்பினர் ஒருவரும் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியருமான பொசேன் காலஹே பத்திரன ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனு நேற்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஹரிபிரிய ஜயசுந்தர, குறித்த மனு உரிய சட்ட காலத்திற்கு ஏற்றவாறு தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

ஆகையினால், அந்த மனுவை தொடர்ந்தும் விசாரிப்பதில் பலனில்லை எனவும், எனவே இதுகுறித்து எதிர்வரும் நாட்களில் அடிப்படை ஆட்சேபனைகளை தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், கருணா அம்மான் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 19ம் திகதி திகாமடுல்ல தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன், “தான் கொரோனாவை விட பயங்கரமானவன் என்றும், ஆணையிரவில் ஒரே இரவில் 2,000 முதல் 3,000 இராணுவத்தினரை கொன்றேன்” என பகிரங்கமாக கூறியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தின் மூலம் கருணா அம்மான் தண்டனை சட்டத்தின் 293 மற்றும் 294 ஆகிய பிரிவுகளுக்கமைய தவறானது எனவும் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் ஐ.நாவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பிற்கு இணங்கவும் தவறு எனவும் மனு தாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 17 (1) பிரிவின் சரத்துக்களுக்கு அமைய தவறு எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஓமல்பே சோபித தேரர் குற்றப் புலனாய்வுத் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அது குறித்து உரிய விசாரணைகள் இதுவரை நடைபெறவில்லை எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் கருணா அம்மானை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளமை குறிப்பிடதக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

‘பெட்டி’ வழங்காததால் குவியும் கொரொனா உடலங்கள்!

கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்போரது உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்படும் நிலையில் அவற்றைக் கொண்டு செல்வதற்கான 'பெட்டி'யையும் உறவினர்களே தர வேண்டும் எனும் நிர்ப்பந்தமும் கொழும்பு வைத்தியசாலையில் விதிக்கப்படுகிறது. இப்பின்னணியில் 58000 ரூபா வரை பொது மக்களிடம்...

2024 ஆம் ஆண்டுக்குள் அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படும் – மஹிந்தானந்த

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஊடாக கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும். அடுத்த ஆண்டு முதல் பெரும்பாலான இறக்குமதி உணவு பொருட்கள்  உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் என கமத்தொழில் அமைச்சர் ...

ஜனாஸாக்களை அடம் பிடித்து எரிப்பது ஏன்? சஜித் கேள்வி

உலகில் 194 நாடுகள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தாலும் அடக்கம் செய்ய அனுமதிக்கின்ற போதிலும் இலங்கையில் மாத்திரம் எரித்தாக வேண்டும் என அரசாங்கம் அடம் பிடிப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

மஹர சம்பவத்துக்கு ‘போதைப் பொருளே’ காரணம்: விமல்

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு அங்கு போதைப் பொருளே காரணம் என விளக்கமளிக்கிறார் விமல் வீரவன்ச. சிறைச்சாலை வளாகத்துக்குள் 'சரத்' எனும் புனைப்பெயரில் அறியப்படும் போதை மாத்திரையை சத்துர எனும் போதைப்பொருள்...

வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள்  பி.சி.ஆர் பரிசோதனை  நடத்தி சடலத்தை கையளிக்க  விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். வேறு நோய்களினால்...

Related News