- Advertisement -
25 C
Colombo
Home World News Europe பிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் காஸ்டெக்ஸ் நியமனம்!

பிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் காஸ்டெக்ஸ் நியமனம்!

- Advertisement -

பிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் காஸ்டெக்ஸ் (Jean Castex) நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

எட்வார்ட் பிலிப் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மறுசீரமைப்பின் பின்னர் புதிய அமைச்சர்கள் குழுவை மேயர் ஜீன் காஸ்டெக்ஸ் வழிநடத்தவுள்ளார்.

55 வயதான காஸ்டெக்ஸ் ஒரு மூத்த அரசு ஊழியர், இவர் உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய அரசாங்கங்களில் பல பதவிகளை வகித்துள்ளார்.

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இதுகுறித்து கூறுகையில், ‘எங்கள் ஆட்சியில், மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரத்தை புதிய வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கடந்த மூன்றாண்டுகளாக, எட்வர்டு பிலிப் மேற்கொண்ட நடவடிக்கைகளை, நான் பாராட்டுகிறேன்’ என கூறினார்.

இந்த நடவடிக்கை அரசாங்க மறுசீரமைப்பிற்கு வழிவகுக்கிறது. மக்ரோன் தனது இறுதி இரண்டு ஆண்டுகளை மீண்டும் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

மக்ரோன் ஐரோப்பிய மட்டத்தில் பிரபலத்தைப் பெற்றிருந்தாலும், கொரோனா விமர்சனங்கள் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான பின்னடைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாள்வது குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டதன் எதிரொலியாக, உள்ளாட்சி தேர்தலில், மேக்ரோன் தலைமையிலான அரசு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.

இதன் விளைவாக மூன்றாண்டுகள் பிரதமராக இருந்த எட்வர்டு பிலிப், தன் பதவியை இராஜினாமா செய்தார்.

பிலிப் பதவி விலகிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, முறைகேடு தொடர்பான கூற்றுக்களைக் கையாளும் குடியரசின் சட்ட நீதிமன்றம், அவரது அரசாங்கம் தொற்றுநோயைக் கையாண்ட விதம் குறித்து விசாரணையைத் ஆரம்பிக்கும் என அறிவித்தது.

வெளியேறிய பிரதமருடன், விசாரணையில் உள்ளவர்களில் பெப்ரவரி மாதம் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அக்னஸ் புசின் மற்றும் அவரது வாரிசான ஆலிவர் வரன் ஆகியோர் அடங்குவதாக மூத்த அரசு வழக்கறிஞர் பிரான்சுவா மோலின் தெரிவித்தார்

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாடசாலை சிறுவர் பூங்காவில் சுதந்திரமாக விளையாடும் குரங்குகள்…!

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதால் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலே குரங்குகள் அங்குமிங்கும்...

கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி சாரையடி பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்துப்பட்டி இறுகி உயிரிழந்துள்ளார். வீட்டு ஜன்னலின் கம்பியில் கழுத்துப்பட்டி கட்டப்பட்டு சுருக்கிடப்பட்ட நிலையில் 09 வயதான சிறுமி நேற்று (30) உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி விளையாட்டாக...

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்றுடன் வாழவேண்டியுள்ளது; WHO

கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலை களைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பாடசாலைகளை மூடிவிட முடியாது ஏனென்றால் உலக சுகாதார...

மின்சார கோளாறால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு 10 இலட்சம் ரூபாய்

இலங்கை மின்சார சபையின் மின் அமைப்பில் காணப்படும் தவறுகள் மற்றும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான காப்பீட்டுத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் அமைச்சர்...

ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.24 மணியளவில் இவ்வாறு...

Related News