- Advertisement -
25 C
Colombo
Home COVID-19 தேவையின்றி வெளியிடங்களுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

தேவையின்றி வெளியிடங்களுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட வில்லை. அதனால் அனைவரும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடிப்பதுடன், தேவையின்றி வெளியிடங்களுக்கு பயணிப்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாராத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொவிட் -19 வைரஸ் பரவல் இன்னும் முற்று முழுதாக கட்டுப்படுத்தப்பட வில்லை. அதனால் சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய தொடர்ந்தும் செயற்படுவதுடன், அத்தியவசிய தேவைகள் எதுவுமின்றி வீட்டை விட்டு வெளியேறுவதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் , நாடு வழமைக்கு திரும்பியுள்ளதால் சிலர் முகக்கவசம் அணிவதில் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பொலிஸார் இவ்வாறு முகக்கவசம் அணியாது ஆள்நடமாட்டம் அதிகமான பகுதிகளில் நடமாடும் நபர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களுக்கு தேவையான முகக்கவசங்களையும் பெற்றுக் கொடுத்து வருகின்றனர்.

வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஒவ்வொரு நபருக்கும் இடையில் ஒரு மீட்டர் தூர இடைவெளியை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் , இது அனைத்து காரியாலயங்களிலும் பின்பற்றப்படுகின்றது. இதேபோல் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இடங்களிலும் இதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

இதேவேளை பஸ்களின் ஆசனங்களின் அளவிற்கே பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டும் என்று சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ள போதிலும் , சில பஸ்களில் அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்வதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது ஒரு சிக்கல் நிலைமை என்றாலும் ,  எமது நாட்டை பொறுத்தமட்டில் போதியளவான அடிப்படை வசதிகள் இன்னமும் ஏற்படுத்தப்பட வில்லை. இதனால் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் சென்றால் பெருந்தொகையான பயணிகள் தங்களது பயணங்களை செல்ல முடியாமல் போகும். அதனால் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்தி தேவையின்றி வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News