- Advertisement -
28 C
Colombo
Home Local News திருகோணமலை யாருக்கு சொந்தமானது என்பதை இம்முறை தேர்தலில் நிரூபித்து காட்ட வேண்டும்

திருகோணமலை யாருக்கு சொந்தமானது என்பதை இம்முறை தேர்தலில் நிரூபித்து காட்ட வேண்டும்

- Advertisement -

திருகோணமலை யாருக்கு சொந்தமானது என்பதை இம்முறை தேர்தலில் நிரூபித்து காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள தனது வீட்டில் வைத்து இன்றையதினம் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில், திருகோணமலையில் மிக நீண்ட காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது.

நடைபெறவுள்ள தேர்தல் என்பது திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும்.

போட்டியிடுகின்ற கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த மாவட்டத்தில் ஒரு சிறந்த மக்கள் ஆணையை பெறுவதன் மூலமே நாங்கள் அரசியல் அதிகாரத்தை பேசுவதற்கும், அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கத்துடனும், சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் எங்களுடைய திருகோணமலை மாவட்டம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

இந்த மண்ணில் பாரம்பரியமாக நூற்றாண்டுக் கணக்காக வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள் நாங்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமாக இருந்தால் சிறந்த ஆணையை திருகோணமலை மாவட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

அற்ப சொற்பமான வாக்குகளை பெறுகின்ற கட்சிகளுக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து அதை சீரழிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றிய போது 13ஆம் சக்திக்கு அப்பாற் சென்று 13 பிளஸ் என்று சொல்லப்படுகிற தமிழ் மக்களுக்கு உரிய அதிகாரப்பகிர்வு ஒருமித்த நாட்டுக்குள் அந்த அதிகாரத்தை பார்த்து நான் வழங்குவேன் என்று கூறியிருப்பது ஒரு மகத்தான வெற்றி. இதை அவர் இன்று மாத்திரம் கூறவில்லை. தொடர்ந்து கூறி வருகிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும்தான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிற முடிவுக்கு மஹிந்த ராஜபக்ஷ அவருடைய அரசாங்கமும் வந்திருக்கின்றது என்பதை தங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து பைடன் அறிவிப்பு!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடன், ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து இன்று இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கருத்துத் தெரிவித்துள்ளார். அந்தவகையில், ஈரானுடனான 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுல்படுத்துவது...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு வயதுச் சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பஹிரத் குஷ்வாஹா தம்பதிகளின் கணேந்திரா என்ற மகனே...

அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்!

பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின்  (Anguilla) ஆளுநராக (Governor) அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த செல்வரட்ணத்தின் மகளான டிலானி லண்டன் பல்கலைக்கழகத்தில்...

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு

ரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை ...

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனாலும் அரசியல் கட்சி  ஆரம்பிப்பது  தொடர்பாக எந்த...

Related News