- Advertisement -
30 C
Colombo
Home Local News கொழும்பு துறைமுக நகரத்தில் நாட்டிற்கு சொந்தமான பாரிய நிலப்பரப்பை இழந்துள்ள இலங்கை

கொழும்பு துறைமுக நகரத்தில் நாட்டிற்கு சொந்தமான பாரிய நிலப்பரப்பை இழந்துள்ள இலங்கை

- Advertisement -

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தில் இலங்கைக்கு சொந்தமாகவிருந்த பாரிய அளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச செயலக பிரிவின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு நேற்று மாலை வீரக்கெட்டியவில் இடம்பெற்றிருந்தது. இதன்போது பிரதமர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளதனை மீளவும் வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்கள் அரசாங்கத்தின் கீழ் நாட்டையே வேலைத்தளமாக்கி மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் கடந்த ஐந்து வருடங்கள் முழுமையாக தடைப்பட்டுள்ள நிலையில் கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு நடவடிக்கையும் இரண்டு வருடங்கள் தடைப்பட்டிருந்தன.

அந்த காலப்பகுதியினுள் துறைமுக நகர ஒப்பந்தத்தை மாற்றியமையினால் எங்கள் நாட்டிற்கு சொந்தமாகவிருந்த நிலப்பரப்பை குறைத்து கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் தயாரித்துள்ளது.

ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தின் மூலம் இழந்த நிலப்பரப்பை மீள பெறுவதற்கு தற்போது எமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக நாட்டின் அனைத்து பிரதேசத்திலும் அபிவிருத்தி மேற்கொள்வதற்காக ஒரே அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதன் மூலம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை அதிகரித்து மாகாண மட்டத்தில் அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எங்கள் அரசாங்கத்தின் கீழ் தங்காலை சிறைச்சாலையை அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்மூலம் தற்போது வரையில் அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் ஓரளவு பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை இதுவரையில் ஆசியாவின் சிறந்த எடுத்துக்காட்டுடைய சிறைச்சாலையாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சி

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மீன் நுகர்வு இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களின் முன்னிலையில் பச்சை மீனை...

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும்...

மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான திகதியை அறிவித்தார் பஷில்..!

வரவு - செலவு திட்டத்தை அரசியல் இலாபத்துக்காக எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  பாதீடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்  கூட்டம் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை...

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணை...

Related News