- Advertisement -
24 C
Colombo
Home Local News 'எம்.சி.சி. ஒப்பந்தத்தை ஏற்க முடியாது': அமெரிக்காவிடம் அறிவிக்கவுள்ளதாகக் கூறுகிறார் பிரதமர்

‘எம்.சி.சி. ஒப்பந்தத்தை ஏற்க முடியாது’: அமெரிக்காவிடம் அறிவிக்கவுள்ளதாகக் கூறுகிறார் பிரதமர்

- Advertisement -

மில்லேனியம் சவால் (எம். சி. சி.) ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளினால் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்ற  நிலைப்பாட்டை அமெரிக்காவிற்கு தெரிவிக்கவுள்ளதாகக் கூறிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , சர்வதேச மட்டத்திலான ஒப்பந்தங்களை செய்துக் கொள்ளும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்பதனாலேயே எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு குழுவை நியமித்து அறிக்கை பெற்றுக் கொண்டுள்ளோம் என்றும் கூறினார்.

முல்கிரிகல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,

கடந்த ஐந்து வருட காலத்தில் நான் முன்னெடுத்த அபிவிருத்தி பணிகள் திசைத்திருப்பி விடப்பட்டன. இதற்கு பிரதான காரணம் இரண்டு அரச தலைவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள். அரசியல் பழிவாங்களுக்காக கொழும்பு துறைமுக நகரம் 2 வருட காலத்திற்கு இடை நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஒப்பந்தம் திருத்தியமைக்கப்பட்டு அபிவிருத்தி நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அம்பாந்தோட்டை துறைமுகம், மற்றும் மத்தளை விமான நிலையம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் விதமாக நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் கடந்த அரசாங்கம் எங்களை அவமதிப்பதாக கருதி விமான நிலையத்தை நெற்களஞ்சியமாக மாற்றியமைத்தது. இதன் தாக்கத்தை மக்களே எதிர்க் கொண்டார்கள்.

30வருட கால யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அபிவிருத்தி பணிகள் அங்கு துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. கடந்த அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திகளை அரசியல் காரணிகளினால் இடை நிறுத்தியது. இடை நிறுத்தம் செய்யப்பட்ட அபிவிருத்தி பணிகள் மீள் ஆரம்பிக்கப்பட வேண்டும். பொதுத்தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதியின் கொள்கைளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது  இல்லாமல் போயுள்ளது. மக்களின் ஆணையினை பெற்றுக் கொள்வதற்கு இவரிடம் எவ்வித கொள்கையும் கிடையாது. மக்களையும்.  நாட்டையும் நேசிக்கும் தரப்பினரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்புங்கள்.

ஐக்கிய தேசிய கட்சிமற்றும் சஜித் பிரேமதாஸ பற்றி தொடர்பில் கருத்துரைப்பதில் எவ்வித பயனும் கிடையாது. ஜனாதிபதியை  பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றம் தோற்றம் பெறுவது அவசியமாகும். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்தார்கள். அத்தீர்மானம் பொதுத்தேர்தலிலும் தொடர வேண்டும்.

  சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒப்பந்தம் செய்துக் கொண்டதன் பின்னர் இடைநடுவில் ஒருதரப்பினர் விலக முடியாது. ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு மீளாய்வு குழுவை நியமித்தோம். தற்போது அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தகைகள் ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் ஒப்பந்தத்தை நிராகரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளோம்.

இதனை அமெரிக்க எம். சி. சி.  நிறுவனத்திற்கும் தெரிவிக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...

Related News