- Advertisement -
30 C
Colombo
Home Local News பாடசாலை மாணவர்களுக்கான உணவு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நன்கொடை

பாடசாலை மாணவர்களுக்கான உணவு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நன்கொடை

- Advertisement -

பாடசாலை மாணவர்களுக்கான உணவு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு உதவியாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு நிகழ்ச்சித் திட்டமும் அவுஸ்திரேலிய வெளி விவகார திணைக்களமும் இணைந்து கல்வி அமைச்சுக்கு 4,00,000 அமெரிக்க டொலர்களை (89 மில்லியன் ரூபா) நன்கொடை அளித்துள்ளது.

இதற்கமைய கொவிட்-19 அச்சுறுத்தலால் பாடசாலைகள் மூடப்பட்டாலும் சுமார் 80 ஆயிரம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு அவசியமான உலர் உணவுப் பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு கிட்டவுள்ளது. உலக உணவு நிகழ்ச்சித் திட்டமானது கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தேசிய பாடசாலை மாணவர்களின் உணவு நிகழ்ச்சித் திட்டத்துக்கு உதவி வருகின்றது. இனடிப்படையில் தற்போது அம்மாணவர்களுக்கு அவசியமான உலர் உணவுகள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் தொடர்ந்தும் உதவ முன்வந்துள்ளது.

இது தொடர்பில் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிட பணிப்பாளர் பிரெந்தா பார்ட்டன் கருத்து தெரிவிக்கையில், ஆரம்ப பாடசாலை மாணவர்களில் 40 சதவீதமானவர்கள் அதிகம் உடல் நிறை குறைந்தவர்கள். பலருக்கு பாடசாலையில் கிடைக்கும் ஒரு வேளை உணவு மட்டும் அவர்களது அன்றைய நாளுக்குரிய உணவாக அமைகின்றது. இதனால் இத்திட்டத்தை தொடருவதற்கு நாம் கல்வி அமைச்சுக்கு தொடர்ந்து உதவ உள்ளோம்இ´ என்றார். ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முட்டைகள் உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

இலங்கையில் முதலாவது கொவிட்-19 நோயாளி இனங்காணப்பட்டதை தொடர்ந்து 48 மணிநேரத்தினுள் அனைத்து பாடசாலைகளையும் நாம் உடனடியாக மூடினோம். எனினும் மாணவர்களின் உணவு நிகழ்ச்சித் திட்டத்தை தொடருவதற்கு உதவுவதற்காக உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கல்வியமைச்சர் தெவித்தார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here