- Advertisement -
27 C
Colombo
Home Local News தேர்தல் கண்காணிப்பு: 5000 க்கும் அதிகமான உறுப்பினர்களை ஈடுபடுத்த முடிவு

தேர்தல் கண்காணிப்பு: 5000 க்கும் அதிகமான உறுப்பினர்களை ஈடுபடுத்த முடிவு

- Advertisement -

பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வன்முறை கண்காணிப்பு மத்திய நிலையம் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கண்காணிப்பு நடவடிக்கைகளில் நியமிக்கவுள்ளதாக அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் வன்முறை கண்காணிப்பு மத்திய நிலையம் ஐந்தாயிரத்துக்கும் அதிக உறுப்பினர்களை கண்காணிப்பு நடவடிக்கைகளில் நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இதன்போது கள கண்காணிப்பு, மாவட்ட ஒருங்கிணைப்பு, நடமாடும் கண்காணிப்பு மற்றும் வாக்கு எண்ணும் கண்காணித்தல் என்ற பிரிவுகளின் கீழ் இந்த கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

அதன் பிரகாரம் தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் கள கண்காணிப்பாளர்களாக 160 பேரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக 25 பேரும்  நடமாடும் கண்காணிப்பாளர்களாக 100 பேரும் கண்காணிப்பு நடவடிக்கையில் கலந்துகொள்வார்கள். அத்துடன் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களில் கணகாணிப்பாளர்கள் 500 பேர்வரை ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் வாக்களிப்பு தினத்தில் மாத்திரம் 3ஆயிரம் பேர்வரை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இருக்கின்றோம்.

அத்துடன் இம்முறை தேர்தல் கண்காணிப்பு கடமைக்கு விசேட திறமையுள்ள 100 பேர் இணைத்துக்கொண்டிருக்கின்றமை விசேட அம்சமாகும். இவர்கள் அனைவருக்கும் தேவையான பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

அதன் பிரகாரம் கண்காணிப்பாளர்கள் இரண்டு குழுவினருக்கு ஆரம்பகட்ட பயிற்சிகள் இன்று ஞாயிற்றுக்கிழமையும் நேற்று சனிக்கிழமையும் வழங்கப்பட்டன. இதன்போது சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு முறைக்கமைய, சமூக இடைவெளியை பேணிக்கொண்டு பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெற்றன.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News