- Advertisement -
30 C
Colombo
Home Local News இன்னும் 2 வாரங்கள் அவதானம் மிகஅவசியம் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை

இன்னும் 2 வாரங்கள் அவதானம் மிகஅவசியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- Advertisement -

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாமல் போய்விடும்.இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் கூறியதாவது:-இலங்கையில் கொரோனா வைரஸால் அதிகமாகக் கடற்படையினர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 935 தொற்றாளர்களில் 498 பேர் கடற்படையினர்,10 பேர் இராணுவத்தினர், ஒருவர் விமானப் படைச் சிப்பாய், 36 பேர் முப்படையினரின் உறவினர்கள், 3 பேர் வெளிநாட்டவர்கள், 45 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள், 67 பேர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள், 276 பேர் பிரதேசங்களிலிருந்து தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட மக்கள்.இந்தநிலையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் எமது நடவடிக்கைகள் முன்னோக்கிச் செல்கின்றன.ஆனால், இன்னமும் கொரோனா வைரஸ் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.மக்களின் அத்தியாவசிய சேவை கருதியே கொழும்பு, கம்பஹா தவிர ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியுள்ளோம்.மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசங்கள் அணிந்து செல்ல வேண்டும்.

சமூக இடைவெளியைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும்.சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நிலைமை இலங்கையில் ஏற்படக்கூடாது என்பதே இங்குள்ள அனைவரினதும் பிராத்தனையாகும்.போராலும் சுனாமியாலும் மனிதப் பேரழிவுகளைச் சந்தித்த எமது நாடு கொரோனாவாலும் அழிவுகளைச் சந்திக்கத் தயார் இல்லை” – என்றனர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here