- Advertisement -
29 C
Colombo
Home World News சீனாவை அடி பணியச் செய்ய 18 அம்சத் திட்டங்களை வகுத்தது அமெரிக்கா! முழுமையான விபரம் வெளியானது

சீனாவை அடி பணியச் செய்ய 18 அம்சத் திட்டங்களை வகுத்தது அமெரிக்கா! முழுமையான விபரம் வெளியானது

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சீனாவை பொறுப்பேற்க வைக்க 18 அம்ச திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் வெளியிட்டுள்ளார்.அண்மைய நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று நோயை சீனா நினைத்திருந்தால், அந்த நாட்டுக்குள்ளேயே தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என்று அமெரிக்கா அழுத்தம் திருத்தமாக தெரிவித்து வருகிறது.இந்த விவகாரத்தில் உண்மை தகவல்களை சீனா மறைத்து விட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. கொரோனா வைரஸ் தொற்று குறித்து சர்வதேச விசாரணை நடத்தி, சீனாவை பொறுப்பேற்க வைக்க வேண்டும், அதில் சீனா ஒத்துழைக்க மறுத்தால் அந்த நாட்டின்மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று கூறி அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அதன்மீதான விவாதத்தில் குடியரசு கட்சியின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் தாம் டில்லிஸ் தகவல் வெளியிடுகையில், சீனாவை பொறுப்பேற்க வைக்கும் விதத்தில் 18 அம்ச திட்டத்தை வெளியிட்டார்.அமெரிக்க பொருளாதாரத்தை, பொதுசுகாதாரத்தை, தேசிய பாதுகாப்பை பாதுகாக்கும் நேரத்தில், சீனாவுக்கு பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும்.பசிபிக் தடுப்பு முயற்சியை உருவாக்க வேண்டும். இதற்காக அமெரிக்க ராணுவத்துக்கு 20 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1½ லட்சம் கோடி) நிதி ஒதுக்க வேண்டும்.
இந்தியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் ராணுவ உறவை வலுப்படுத்த வேண்டும், ராணுவ தளவாட விற்பனையை விரிவுபடுத்த வேண்டும்.

ஜப்பான் ராணுவத்தை மறுகட்டமைப்பு செய்ய ஊக்குவிக்க வேண்டும். ஜப்பான், தென்கொரியாவுக்கு தாக்குதல் தளவாடங்களை விற்பனை செய்ய வேண்டும்.
உற்பத்தி பிரிவுகளை திரும்பவும் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு மாற்ற வேண்டும். மேலும் படிப்பாக வினியோகத்தில் சீனாவை சார்ந்து இருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
அமெரிக்க தொழில்நுட்பத்தை திருடுவதில் இருந்து சீனாவை தடுத்து நிறுத்த வேண்டும்.
நமது தொழில்நுட்ப நன்மைகளை மீண்டும் பெற ஏதுவாக அமெரிக்க நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்க வேண்டும்.

சீனா ‘ஹேக்கிங்’ (சட்ட விரோத ஊடுருவல்கள் செய்வது) செய்வதை தடுக்கிற வகையில் இணையதள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.
சீனா தங்கள் கடன்களை அடைப்பதற்கு அமெரிக்கர்களின் வரிப்பணம் செல்வதை தடுக்க வேண்டும்.
சீன தொழில் நுட்ப நிறுவனமான ஹூவாய்க்கு தடை விதிக்க வேண்டும். இத்தகைய தடைகளை பிற நட்பு நாடுகள் விதிக்க ஒருங்கிணைக்க வேண்டும்.

கொடூரமான மனித உரிமை பதிவுகளுக்காக சீனா மீது தடை விதிக்க வேண்டும்.
2022-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் இருந்து சீனாவை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு டிரம்ப் நிர்வாகம் முறைப்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
அமெரிக்காவுக்குள் சீனாவின் பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

சீன அரசால் நடத்தப்படுகிற ஊடகங்களை பிரசார பிரதிநிதிகளாக கருத வேண்டும்.
கொரோனா வைரஸ் விவகாரத்தை மூடி மறைத்தது தொடர்பாக சீனா மீது விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணை மற்றும் சீர்திருத்தம் மூலம் உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.
வளர்ந்து வரும் நாடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் சீனாவின் கடன் வழங்கும் ராஜதந்திரத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

சாத்தியமான தொற்றுநோய்கள் குறித்த உளவுத்தகவல்கள் பகிர்வை அதிகப்படுத்த வேண்டும். வெளிநாட்டு அரசுகள், அபாயகரமான வைரஸ்களை கையாள்வதை கண்காணிக்கிற வகையில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.என்று விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க திட்டம்

கொவிட் 19 அவதான நிலை காணப்படாத பிரதேசங்களில் முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். சுகாதார பிரிவு மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி...

மனைவியை பீங்கானால் அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

திருகோணமலை -கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியை பீங்கானால் அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இக்கட்டளையை இன்று (25) பிறப்பித்துள்ளார். இவ்வாறு...

கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பேச ஜேர்மனியின் 16 மாநில முதல்வர்களுடன் சந்திப்பிற்கு...

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விக்டோரியா நீர்த்தேக்கம் குறித்து விசேட கவனம்

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விக்டோரியா நீர்த்தேக்கம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வருடம் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடர்ந்து கண்டியின் சில பகுதிகளில் சிறியளவில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, விசாரணைகள் தொடர்ந்து...

ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுதலை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய்  பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here