- Advertisement -
25 C
Colombo
Home World News Africa கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க 330 மில்லியன் டொலர்கள் கோரும் ட்ரம்ப் அரசாங்கம்!

கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க 330 மில்லியன் டொலர்கள் கோரும் ட்ரம்ப் அரசாங்கம்!

- Advertisement -

பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளின் கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க 330 மில்லியன் டொலர்களை, டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் கோரியுள்ளது.

கார்ட்டூமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

2005ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அமெரிக்க வெளியுறவு செயலாளர் சூடானுக்குச் சென்ற முதல் பயணம் இதுவாகும்.

1998ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடந்த அல்-கைதா பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பணம் இழப்பீடாக வழங்கப்படுமென மைக் பொம்பியோ தெரிவித்தார்.

2000ஆம் ஆண்டில் யேமனில் அல்-கைதா தாக்குதலில் கொல்லப்பட்ட 17 அமெரிக்க துருப்புக்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க சூடான் முன்பு ஒப்புக் கொண்டமை நினைவிருக்கலாம்.

ஈரான், வட கொரியா மற்றும் சிரியா உள்ளிட்ட அமெரிக்க கருப்பு பட்டியலில் நான்கு நாடுகளில் சூடான் ஒன்றாகும். சூடான் 1993இல் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சர்வாதிகாரி ஒமர் அல்-பஷீரின் நடவடிக்கைகளுக்கு புதிய சிவில் அரசாங்கம் பொறுப்பேற்கக் கூடாது என்று கருதும் வட ஆபிரிக்க தேசத்தில், சிலருக்கு அமெரிக்காவின் இந்த கோரிக்கை கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்-பஷீரின் கீழ் சூடான் இஸ்ரேலுக்கு எதிராக போராடும் தீவிர இஸ்லாமிய சக்திகளுக்கு ஆதரவளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. செவ்வாயன்று நடந்த கூட்டத்தின் போது, ஜெருசலேமுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த பாம்பியோ மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் அப்தல்லா ஹம்டோக் மறுத்தார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாகிஸ்தானில் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு தூக்கு !!

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும்...

‘ஜப்பான் கடல்’ என்றழைக்கப்படும் பகுதியில் அமெரிக்க கப்பலை விரட்டிய ரஷ்யா!

‘ஜப்பான் கடல்’ என்று அழைக்கப்படும் பகுதியில் தமது கடற்பிரதேசத்தில் நுழைந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை தமது போர்க்கப்பல் விரட்டியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் தமது கடற்பரப்பில் 2 கி.மீ....

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு கோடி ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து...

ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான...

சூடானின் முன்னாள் பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பு!

சூடானின் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். சூடான் நாட்டில் ஜனநாயக் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமராக இருந்தவர் சாதிக் அல் மஹ்தி, கடந்த ஒக்டோபர்...

Related News