- Advertisement -
25 C
Colombo
Home World News குரங்குகளுக்கு கொரோனா, தடுப்பூசி செலுத்தி பரிசோதனை

குரங்குகளுக்கு கொரோனா, தடுப்பூசி செலுத்தி பரிசோதனை

- Advertisement -

கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசி ஒன்று ஆறு செம்முகக் குரங்குகளுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது பயனுள்ள விதத்தில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை அமெரிக்காவில் நடத்தப்பட்டது.

சார்ஸ் கோவிட் 2 வகை வைரஸ் பாதிப்பைக் குரங்குகளுக்கு ஏற்படுத்தி, அவற்றிற்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது.

இந்தத் தடுப்பூசியால் அந்தக் குரங்குகளின் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவது குறைவதைக் காண முடிந்தது. இது கொரோனா தடுப்பூசிக்கான புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

தற்போது மனிதர்களின் மீது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த மருந்து விரைவில் மருத்துவப் பயன்பாட்டுக்குத் தயாராகும் என்ற நம்பிக்கையைப் பலருக்கும் அளித்துள்ளது.

ஆனால், இது மனிதர்கள் மீதும் அதே பலனை அளிக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது.

அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிவியலாளர்கள் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த பரிசோதனையை செய்தனர்.

இந்த தடுப்பூசி போடப்பட்ட விலங்குகளுக்கு, நிமோனியா ஏற்படுவது தடுக்கப்பட்டது.

ரீஸஸ் மகாக்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் செம்முகக் குரங்குகள், மனிதர்களைப் போன்ற நோய் எதிர்ப்பு அமைப்பைக் கொண்டவை.

நல்ல வேலையாக நோய் எதிர்ப்பு மேம்படுவதால் ஏற்படும் எந்த நோயையும் இந்தத் தடுப்பூசி தூண்டவில்லை.

அப்படி ஏற்பட்டால் அது “கோட்பாட்டு ரீதியான அபாயமாகும்” என்று விவரிக்கிறார் பிபிசியின் மருத்துவ செய்தியாளர் பெர்கஸ் வால்ஷ். அதாவது உடலில் ஒரு நோய்க்கு எதிராகப் போராட செலுத்தப்படும் தடுப்பூசி, மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.இதனால் வேறு சில நோய்களும் உடலில் ஏற்படலாம்.

இதுபோன்ற விளைவுகள் இதற்கு முன் ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக சார்ஸ் வைரசிற்கான தடுப்பூசி பரிசோதனைகளை விலங்குகளுக்கு செய்தபோது இவ்வாறான விளைவுகள் ஏற்பட்டது. அது சார்ஸ் தடுப்பூசியை உருவாக்குவதில் ஒரு பெரும் தடுமாற்றமாகப் பார்க்கப்பட்டது.

தற்போது பரிசோதிக்கப்படும் கோவிட் 19 தடுப்பூசிக்கான ஆய்வின் முடிவுகள் வேறு ஆராய்ச்சியாளர்களால் இன்னும் மறு ஆய்வு செய்யப்படவோ, அறிவியல் சஞ்சிகைகளில் முறையாகப் பதிப்பிக்கப்படவோ இல்லை.

எனினும் இது “உயர்ந்த தரத்திலான ஆய்வாகவும், மிகவும் நம்பிக்கை தருவதாகவும்” இருப்பதாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராப்பிகல் மெடிசனின் பேராசிரியர் ஸ்டீஃபன் ஈவான்ஸ் கூறுகிறார்.

இதனிடையே பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு மனிதர்களிடத்திலும், இந்த ஆய்வு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பரிசோதனை நிலையிலேயே உள்ளன.

இந்த தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குரங்குகளின் உடலில் மோசமான நோய் எதிர்வினைகள் எதுவும் இருக்கவில்லை என்பதும் நிமோனியா ஏற்படவில்லை என்பதும் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் வருகைதரு பேராசிரியர் மருத்துவர் பென்னி வார்டு கூறுகிறார்.

கொரோனா வைரஸுக்கு என்றே தனித்துவமாக இருக்கும் முள் போன்ற வெளிப்புற பாகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தடுப்பூசி செயல்படுகிறது.

அதாவது வைரஸ் தொற்று உண்டான பின்பு அந்த குறிப்பிட்ட பாகத்தை உடல் அடையாளம் காணும். அடையாளம் கண்டபின் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர் பொருட்களை (antibodies) உடல் உருவாக்கத் தொடங்கும்.

இவ்வாறான நிகழ்வு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட குரங்குகளின் உடலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here