- Advertisement -
30 C
Colombo
Home Local News தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாகக்கூடும்! Red Alert

தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாகக்கூடும்! Red Alert

- Advertisement -

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது தற்போது திருகோணமலையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.இந்த நிலையில், நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.கேகாலை மாவட்டமே மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கேகாலை – இம்புல்கஸ்தெனிய பகுதியில் வௌ்ளத்தில் சிக்குண்ட 48 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, கேகாலை வல்தெனிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதான பெண்​ணொருவர் உயிரிழந்துள்ளார்.பலத்த மழை காரணமாக கேகாலை மாவட்டத்தில் இதுவரை 530 குடும்பங்களை சேர்ந்த 1830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு மக்கள் பாதுகாக்கான இடங்களை நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.இதனால் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிற்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சி

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மீன் நுகர்வு இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களின் முன்னிலையில் பச்சை மீனை...

மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கை வந்துள்ள மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும்...

மக்களுக்கு தெளிவூட்டுவதற்கான திகதியை அறிவித்தார் பஷில்..!

வரவு - செலவு திட்டத்தை அரசியல் இலாபத்துக்காக எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  பாதீடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்  கூட்டம் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை...

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணை...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here