- Advertisement -
24 C
Colombo
Home Local News ராஜபக்ச அரசிடம் சம்பந்தன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

ராஜபக்ச அரசிடம் சம்பந்தன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

- Advertisement -

“சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசு விரைந்து விடுவித்தால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். எனவே, வாய்ச்சொல்லை – வாக்குறுதியை அரசு செயலில் காட்ட வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.’சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நினைக்கின்றேன்’ என்று நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார். அவரின் கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நாம் நேரில் சந்தித்து நடத்திய பேச்சில் அரசியல் தீர்வு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய விவகாரங்களை முக்கிய விடயங்களாகப் பேசியிருந்தோம். அதன்பிரகாரம் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பிரதமரிடம் சில தினங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்தார்.

அதன்போதும் அதற்கு முன்னர் எம்முடன் நடத்திய பேச்சின்போதும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதியுடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாகப் பிரதமர் வாக்குறுதியளித்திருந்தார்.இந்தநிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவரின் கருத்தை நாம் வரவேற்கின்றோம்; ஊக்குவிக்கின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகளை அரசு விரைந்து விடுவித்தால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். எனவே, வாய்ச்சொல்லை – வாக்குறுதியை அரசு செயலில் காட்ட வேண்டும்.தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இது மரணதண்டனையை சிறையில் இருந்து அனுபவிப்பதற்குச் சமமானது.எனவே, இனியும் அவர்களைத் தடுத்துவைக்க வேண்டாம். அவர்கள் அனுபவித்த கொடிய தண்டனைகள் போதும். காலம் தாழ்த்தாது பொதுமன்னிப்பு வழங்கியாவது அவர்களை அரசு விடுவிக்க வேண்டும். அவர்களின் இருட்டறை வாழ்வுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மிகுதிக் காலத்திலாவது அவர்கள் தங்கள் சொந்தங்களுடன் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு வாழ வேண்டும்” – என்றார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here