- Advertisement -
26 C
Colombo
Home News Sports ஜெவ்னா ஸடாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை

ஜெவ்னா ஸடாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை

- Advertisement -

லங்கா பிறீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் தமது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளனர்.

ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளரும், மைக்ரோசொவ்ட் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான Rahul Sood இன் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய இலச்சினை ஜெவ்னா அணியை சர்வதேச ரீதியில் பிரபலப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

‘சர்வதேச இலச்சினைகள் மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பில், ராகுலின் புதிய சிந்தனைகளும் தொலைநோக்குப் பார்வைகளும் விலைமதிப்பற்றவை’ என ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பிரதம மூலோபாய அதிகாரி ஆனந்தன் ஆர்னல்ட் குறிப்பிட்டார்.

‘எங்களது இலக்கு உலகளாவியது. கண்டங்கள் கடந்த ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகளைக் கொண்டிருந்தாலும், நாங்கள் இலங்கையர்களாக யாழ்ப்பாண நகரை பிரதிநிதிப்படுத்த கிடைத்த இந்த வாய்ப்பைப் பெருமையாகவே கருதுகிறோம்’ என ஆனந்தன் ஆர்னலட் மேலும் தெரிவித்தார்.

ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளராக இணைவதையிட்டு பெருமகிழ்ச்சி அடைவதாக கனேடிய செய்திச் சேவையான கெனடியன் ப்ரெஸ்ஸுக்கு அளித்த நேர்காணலில் ராகுல் சூட் தெரிவித்தார்.

‘உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கை நம்பமுடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது’ என்று தெரிவித்த ராகுல் சூட்,  ‘இலங்கையில் எல்பிஎல் போட்டிகள் ஆரம்பமாவதைப்பற்றி அறிந்ததும் நான் அதை  கிடைப்பதற்கரியதொரு சந்தர்ப்பமாகவே நோக்கினேன்’ எனவும் குறிப்பிட்டார்.

தனக்கு இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமையில் அபார நம்பிக்கை இருப்பதாக, ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் குழாத்துக்கு வியாஸ்காந்தை தெரிவுசெய்யும் துணிச்சலான முடிவை எடுத்த அணியின் தலைவர் திஸர பெரேரா தெரிவித்தார்.

‘இலங்கை கிரிக்கெட் அணிக்கு திறமையான வீரர்களைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் நோக்கத்துடன், பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த, திறமையான கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணி தொடர்ந்தும் விளையாடும் வாய்ப்புக்களை வழங்கும்’ எனவும் திஸர பெரேரா கூ

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அமெரிக்க அமைச்சரவை அதிகாரியின் தாய்வான் பயணம் ஒத்திவைப்பு!

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அமைச்சரவை மட்டத் தலைவர் அண்ட்ரூ வீலர், தாய்வான் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த விஜயத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ள அவரது அலுவலகம் சீனாவுடன் பிரச்சினை என்ற கூற்றுக்களை நிராகரித்துள்ளது. கடந்த...

ஜனவரியில் பதவியேற்கும் ஜோ பைடன் அமைச்சரவை!

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன், வெளிவிவகார அமைச்சு உட்பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களின் பெயர்ப் பட்டியலை அறிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பின் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட...

சட்டநடவடிக்கை எடுக்காத அதிகாரிக்கு இடமாற்றம்

கம்பஹா வலயத்துக்கு பொறுப்பான சுற்றாடல் அதிகாரியொருவர், உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தரவுக்கமைய, மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. முத்துராஜவல சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியமைக்கு எதிராக...

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விதிகள் தளர்த்தப்படும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விதிகள் தளர்த்தப்படும்போது கொரோனா பரவும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இங்கிலாந்து தலைவர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த கூட்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து...

இந்தியாவில் துப்பாக்கி, போதைப்பொருளுடன் இலங்கை படகு மீட்பு

இந்தியாவின் தூத்துக்குடிக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் 100 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இலங்கை படகொன்றை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து “ ஷெனய துவ” என்ற  இலங்கைக் படகிற்கு இந்த...

Related News