- Advertisement -
25 C
Colombo
Home Local News எல்பிஎல் போட்டிக்கு அதிஉயர் உயிரியல் பாதுகாப்பு திட்டம்

எல்பிஎல் போட்டிக்கு அதிஉயர் உயிரியல் பாதுகாப்பு திட்டம்

- Advertisement -

வீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் எல்பிஎல் 2020 சுற்றுப் போட்டி தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையிலும் அதி உயர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அமுல்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சினால் தெளிவாகக் குறித்துரைக்கப்பட்டுள்ள கடுமையான மற்றும் கண்டிப்பான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய லங்கா பிறீமியர் லீக் 2020 போட்டிக்கென உயிரியல் பாதுகாப்பு குமிழி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.

‘உலகம் முழுவதும் நடத்தப்படும் உயர்மட்ட விளையாட்டுப் போட்டிகளிலும் ஐசிசி உறுப்பு நாடுகளினால் நடத்தப்படும் பிரதான இருதரப்பு தொடர்களிலும் பின்பற்றப்படும் உயிரியல் பாதுகாப்பு குமிழி முறைமையே எல்பிஎல் நடைபெறும் வளாகத்திலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது’ என எல்பிஎல் போட்டி நிகழ்ச்சி மருத்துவ பணிப்பாளர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.

அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த முறைமைக்கு அமைய, போட்டியில் பங்குபற்றும் ஒவ்வொரு வீரரும் நாட்டுக்குள் வரும்போது 72 மணித்தியாலங்களுக்கு இடையில் கொரோனா அறிகுறி இல்லை என்ற இரண்டு மருத்துவ அறிக்கைகளைக் கொண்டிருக்கவேண்டும். அத்துடன் இங்கு வருகைதந்ததும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

போட்டி நடைபெறும் காலப்பகுதியில் வீரர்கள் குறைந்தபட்சம் 10 பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர். அத்துடன் பயிற்றுநர்கள், அணி உதவியாளர்கள், மத்தியஸ்தர்கள் ஆகியோரும் தொடர்ச்சியாக பிசிஆர் பரிசோதனைக்கு உள்ளாவர்.

ஒரு வீரருக்கு அல்லது பயிற்றுநர் குழாம் அல்லது மத்தியஸ்தர் குழாம் ஆகியவற்றைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் அல்லது அவள், சுகாதார அமைச்சினால் தெரிவுசெய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள நடுத்தர சுகாதார பராமரிப்பு நிலையத்தில் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார். தொற்று அறிகுறி இருந்த இரண்டு வீரர்களுக்கு இந்த நிலையத்தில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நாட்டை வந்தடைந்ததும் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உயிரியல் பாதுகாப்பு குமிழி முறையினாலேயே இந்த தொற்றாளர்களைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

உயிரியல் பாதுகாப்பு குமிழியில் ஒவ்வொரு அணிக்குமாக 5 சுகாதார அமைச்சு டொக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைவிட ஏனையவர்களைப் பராமரிக்கவென இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு டொக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக் குழுவின் இணைப்பாளராக விளையாட்டுத்துறை அமைச்சைச் சேர்ந்த டொக்டர் தமிந்தா அத்தநாயக்க செயற்படுகின்றார்.

உயிரியல் பாதுகாப்பு குமிழியின் பாதுகாப்பு செயற்பாடுகளை இராணுவம் கண்காணிப்பதுடன் உள்ளக அமைப்பு பாதுகாப்பு செயற்பாடுகள் இராணுவ கமாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு முறைமைகள் ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர்களால் மெற்பார்வை செய்யப்படுகின்றது. அதேவேளை சுகாதார அதிகாரிகளுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணி வருகின்றது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தக்கு வீரர்களினதும் தேசத்தினதும் பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும். இலங்கை மக்களுக்கு மீண்டும் கிரிக்கெட் போட்டி ஆர்வத்தை ஊட்டுவதற்கு சுகாதார அமைச்சும் எல்பிஎல் மருத்துவக் குழுவும் கடுமையாக செயற்படுகின்றன. இந்த சுற்றுப்போட்டி நடந்தேறுவதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் கோரிக்கை விடுத்துள்ளது.

கிரிக்கெட் போட்டி மிக பாதுகாப்பாக நடைபெறவேண்டும் என்பதே ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

அமெரிக்க அமைச்சரவை அதிகாரியின் தாய்வான் பயணம் ஒத்திவைப்பு!

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அமைச்சரவை மட்டத் தலைவர் அண்ட்ரூ வீலர், தாய்வான் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த விஜயத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ள அவரது அலுவலகம் சீனாவுடன் பிரச்சினை என்ற கூற்றுக்களை நிராகரித்துள்ளது. கடந்த...

ஜனவரியில் பதவியேற்கும் ஜோ பைடன் அமைச்சரவை!

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன், வெளிவிவகார அமைச்சு உட்பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களின் பெயர்ப் பட்டியலை அறிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பின் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட...

சட்டநடவடிக்கை எடுக்காத அதிகாரிக்கு இடமாற்றம்

கம்பஹா வலயத்துக்கு பொறுப்பான சுற்றாடல் அதிகாரியொருவர், உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தரவுக்கமைய, மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. முத்துராஜவல சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியமைக்கு எதிராக...

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விதிகள் தளர்த்தப்படும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விதிகள் தளர்த்தப்படும்போது கொரோனா பரவும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இங்கிலாந்து தலைவர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த கூட்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து...

இந்தியாவில் துப்பாக்கி, போதைப்பொருளுடன் இலங்கை படகு மீட்பு

இந்தியாவின் தூத்துக்குடிக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் 100 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இலங்கை படகொன்றை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து “ ஷெனய துவ” என்ற  இலங்கைக் படகிற்கு இந்த...

Related News