- Advertisement -
29 C
Colombo
Home World News மிரட்டல் விடுத்த சீனா உலகின் 62 நாடுகள் கொரோனா குறித்த விசாரணைக்கு கோரிக்கை

மிரட்டல் விடுத்த சீனா உலகின் 62 நாடுகள் கொரோனா குறித்த விசாரணைக்கு கோரிக்கை

- Advertisement -

அவுஸ்திரேலியா பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என சீனா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள நிலையில், 62 நாடுகளின் ஆதரவுடன் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து சுயாதீன விசாரணைக்கு அவுஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது.குறித்த புதிய பிரேரணையானது கொரோனா காலகட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து சுயாதீனமான விசாரணையை கோருகிறது.

அவுஸ்திரேலியா முன்வைத்துள்ள இந்த புதிய பிரேரணையை நியூசிலாந்து, இந்தோனேசியா, ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா, கனடா, ரஷ்யா, மெக்ஸிகோ மற்றும் பிரேசில் ஆகியவற்றுடன் 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரிக்க முன்வந்துள்ளது.மேலும், எதிர்வரும் செவ்வாயன்று வாக்களிப்பதற்காக உலக சுகாதார மன்றத்தில் வைக்கப்பட உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் உறுப்பினர்களாக செயல்படும் 194 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள்.இந்த முறை இணையம் வாயிலாக நடக்கவிருக்கும் இக்கூட்டத்தில், அவுஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தனது நிலைப்பாட்டை முன்வைப்பார்.இருப்பினும், நோய்த்தொற்று தொடங்கியதாக நம்பப்படும் சீனா அல்லது வுஹான் நகரத்தை இந்த பிரேரணை குறிப்பாக குறிப்பிடவில்லை என்றே தெரியவந்துள்ளது.

கொரோனா தொடர்பில் சீனா பல ரகசியங்களை மூடி மறைப்பதாகவே உலக நாடுகளில் பெரும்பாலானவை நம்புகின்றன.கொரோனா பரவல் தொடர்பில் ஜனவரி 7 ஆம் திகதியே தெரியவந்தும், சீனத்து ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஜனவரி 23 ஆம் திகதியே, ஹூபே மாகாணத்தை மொத்தமாக முடக்க உத்தரவிட்டுள்ளார்.ஆனால் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் சுமார் 5 மில்லியன் மக்கள், சீனா வழியாக உலகின் பல நகரங்களுக்கும் பயணப்பட்டுள்ளனர்.

இதனிடையே பிப்ரவரி 3 ஆம் திகதி, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர், நாடுகள் தங்கள் எல்லைகளை மூட வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.மட்டுமின்றி மார்ச் 11 அன்று கொரோனா ஒரு பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு அறிவிக்கும் வரை உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி உலகளவில் 4.7 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர்.இதில் 313,703 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர், 2.6 மில்லியன் பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் மேலும், 1.8 மில்லியன் மக்கள் குணமடைந்துள்ளனர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பேச ஜேர்மனியின் 16 மாநில முதல்வர்களுடன் சந்திப்பிற்கு...

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விக்டோரியா நீர்த்தேக்கம் குறித்து விசேட கவனம்

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விக்டோரியா நீர்த்தேக்கம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வருடம் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடர்ந்து கண்டியின் சில பகுதிகளில் சிறியளவில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, விசாரணைகள் தொடர்ந்து...

ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுதலை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய்  பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில்...

புதிய நோய் அறிகுறி குறித்து அவதானம்…

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியால் ஏற்பட்ட மரணங்களில் பெரும்பாலானவை வீட்டிலேயே சம்பவித்துள்ளதென,தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதில் அதிக ஆபத்தான பிரதேசங்களில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட...

அலி சப்ரி இருந்தால்தான் கோட்டாபய வீடு செல்வார்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ விரைவாக வீட்டுக்கு அனுப்புவதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரியின் தொடர்ந்து இந்த சபையில் இருக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹேஷா விதானகே தெரிவித்தார். கொரோனா வைரஸால் உயிரிழந்த...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here