- Advertisement -
28 C
Colombo
Home World News இஸ்ரேலுக்கான சீனத் தூதர் உயிரிழந்ததற்கான காரணத்தை வெளியிட்டது சீனா!

இஸ்ரேலுக்கான சீனத் தூதர் உயிரிழந்ததற்கான காரணத்தை வெளியிட்டது சீனா!

- Advertisement -

இஸ்ரேலுக்கான சீனத் தூதர் டு வீ, உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சீனா அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கான சீனத் தூதர் டு வீ, டெல் அவிவ் நகரத்தின் வடக்கே ஹெர்ஸ்லியாவில் உள்ள அவரது வீட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

தூதரின் திடீர் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்துவதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இந்த மரணம் குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தூதர் டு வீ உடல்நலக் குறைவு காரணங்களுக்காக எதிர்பாராத விதமாக இறந்தார் என்பது ஆரம்ப தீர்ப்பாகும். விபரங்கள் மேலும் உறுதிப்படுத்த காத்திருக்கின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

57 வயதான டு வீ, கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் இஸ்ரேலின் தூதராக நியமிக்கப்பட்டார். அவர் முன்பு உக்ரைனுக்கான சீனாவின் தூதராகப் பணியாற்றினார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். அவர்கள் இருவரும் இஸ்ரேலில் வசிக்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, டு வீ, சீனாவிலிருந்து இஸ்ரேலுக்கு வந்தபோது 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டதாக மே மாதம் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில் கூறியிருந்தார்.

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் சீனா முதலீடுகள் செய்து வருவதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு, இஸ்ரேலுக்கான சீனத் தூதரான டு வீ இரண்டு நாட்களுக்கு முன்புதான் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

0Shares
- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here