- Advertisement -
26 C
Colombo
Home Local News நீர்கொழும்பு கடற்பகுதியில் மாயமான மீனவர்களால் பதற்றம்!

நீர்கொழும்பு கடற்பகுதியில் மாயமான மீனவர்களால் பதற்றம்!

- Advertisement -

கால நிலை தொடர்பாக அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் கம்மல்தொட்டை கடற்பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வேறுமீனவர்களால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றது. கம்மல்தொட்டை பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தி நிஹால் பீரிஸ், நதீர என்ற இரு மீனவர்களே மீட்கப்பட்டுள்ளனர். இரு மீனவர்களும் அப்பாவும் மகனும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மீனவர்கள் இருவரும் காணமல் போனமையை அடுத்து கம்மல்தொட்டை பிரதேசவாசிகள் ஒன்று திரண்டனர். அதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. சாந்தி நிஹால் பீரிஸ், நதீர என்ற இரு மீனவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்மல்தொட்டடை கடல்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். சீரற்ற கால நிலை காரணமாக மீன் பிடிக்க முடியாமல் போனதன் காரணமாக கடலில் வலைகளை விரித்துவிட்டு கரைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் மீண்டும் இருவரும் கடலுக்குச் சென்ற நிலையில் மாலை 5.30 மணிவரை கரைக்கு திரும்பாதிருந்துள்ளனர். இதனை அடுத்து குடும்ப அங்கத்தவர்களும் மீனவர்களும் இதுதொடர்பாக கடற்படையினர் உட்பட மீனவ அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில் காணாமல்போன மீனவர்கள் இருவரையும் தேடி பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் படகுகளில் கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் படகு இன்ஜின் பழுதடைந்த நிலையில் கரைக்கு திரும்ப முடியாமல் நடுக்கடலில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இருவரையும் தேடிச் சென்ற மீனவர்கள் கண்டுள்ளனர்.

பின்னர் அவர்களை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். இதுதொடர்பாக காப்பாற்றப்பட்ட இரு மீனவர்களும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் இருவரும் அதிகாலையில் கடலுக்குச் சென்றோம். நடுக்கடலில் படகு இயந்திரம் பழுதடைந்துவிட்டது. செல்லிடத் தொலைபேசியும் செயலிழந்துவிட்டது. இந்நிலையில் காற்று வீசும் திசையை நோக்கி படகை இருவரும் சமநிலைப்படுத்தியவாறு செலுத்தினோம். ஏழு எட்டு மணித்தியாலங்கள் சென்றது. இதனை அடுத்து நமது சகோதர மீனவர்கள் படகில் வந்து எம்மைக் காப்பாற்றினர் என்று தெரிவித்தனர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here