- Advertisement -
29 C
Colombo
Home World News கொரோனா தடுப்பூசி – மனிதர்களிடத்திலான முதற்கட்ட சோதனையின் முடிவு, நம்பிக்கையளிக்கிறது.

கொரோனா தடுப்பூசி – மனிதர்களிடத்திலான முதற்கட்ட சோதனையின் முடிவு, நம்பிக்கையளிக்கிறது.

- Advertisement -

எட்டு தன்னார்வலர்கள் அடங்கிய குழுவிற்கு அமெரிக்க நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரசிற்கான தடுப்பூசிச் சோதனையானது நல்லதொரு சாதகமான முடிவைத் தந்து கொரோனாவிற்கான தடுப்பூசி தொடர்பாக நம்பிக்கையொளியைத் தருகிறது.

பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனாவிற்கான தடுப்பூசி உருவாக்க முயற்சியானது, நோய்த்தொற்றாளர்களுக்கு சோதித்துப்பார்த்து வெற்றியளித்திருப்பதாக செய்திகள் வெளியாகிய மறுநாள் அமெரிக்க நிறுவனத்தின் சோதனை முடிவுகள் தொடர்பாக இவ்வாறு செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிறுவனத்தின் இந்தச் சோதனை முயற்சியின் மூலம் அவர்கள் தயாரித்த அந்தக் குறித்த தடுப்பூசியானது, மனிதர்களுக்குப் பாதுகாப்பானது என்பதை மட்டுமே அவர்கள் மனிதர்களுக்குச் சோதித்துப் பார்த்ததன் மூலம் உறுதிப்படுத்தக்கூடிய செய்தியென்பதும், இந்தத் தடுப்பூசியானது கொரோனாவை வெற்றிகொள்ளுமா என்பதை இன்னமும் ஆய்வு முடிவுகள் உறுதிசெய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சோதனை முயற்சியானது, மனிதனுடைய நிறமூர்த்தங்களை ஓரளவுக்கு ஒத்திருக்கும் குரங்கிற்கு வழங்கப்பட்டு அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும், அந்தத் தடுப்பூசியால் வைரசினால் ஏற்படும் காய்ச்சல் குணமானாலும் அது மற்றவர்களுக்குத் தொற்றுவதிலிருந்து இந்தத் தடுப்பூசியால் தடுக்கமுடியாமல் போவதற்கான வாய்ப்புகளே இருக்க்கிறது. இவ்வாறாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவால் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் முதற்கட்டத்திலேயே இருக்கின்றன.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்திக் கொரோனாவிற்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான 76 நிறுவனங்களின் பட்டியல் உலக சுகாதார நிறுவனத்திடம் உண்டு. இந்த அமெரிக்க நிறுவனம் போலவே, ஆனால் வேறுபட்ட அணுகுமுறையுடன் ஆர்.என்.ஏ தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் பிரித்தானியாவின் இம்பீரியல் கல்லூரியும் உள்ளது. இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோய்கள் மற்றும் நிர்ப்பீடணத் தொகுதியின் நோயெதிர்ப்பாற்றல் தொடர்பாக ஆய்வுகளைச் செய்யும் பேராசிரியர் றொபின் சர்டொக் அவர்கள் இந்த அமெரிக்க நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உருவாக்க முயற்சி தொடர்பாகக் கருத்துரைக்கும் போது, அந்த மொடர்னா என்ற அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு முயற்சிகளும் முதற்கட்ட சோதனை முடிவுகளும் ஊக்கமளிப்பனவாக உள்ளன எனக் கூறியுள்ளார்.

இந்த மொடர்னா எனப்படும் அமெரிக்க நிறுவனமானது இளவயதுத் தன்னார்வலர்களுக்கே இந்தச் சோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பதும் ஏனைய வயதினர்க்கு இன்னமும் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

புதிய நோய் அறிகுறி குறித்து அவதானம்…

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியால் ஏற்பட்ட மரணங்களில் பெரும்பாலானவை வீட்டிலேயே சம்பவித்துள்ளதென,தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதில் அதிக ஆபத்தான பிரதேசங்களில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட...

அலி சப்ரி இருந்தால்தான் கோட்டாபய வீடு செல்வார்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ விரைவாக வீட்டுக்கு அனுப்புவதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரியின் தொடர்ந்து இந்த சபையில் இருக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹேஷா விதானகே தெரிவித்தார். கொரோனா வைரஸால் உயிரிழந்த...

கோரிக்கைளை முன்வைத்து தொடரும் கைதிகளின் போராட்டம்…

பல கோரிக்கைளை முன்வைத்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த கைதிகள், தற்போது கூரை மீதேறி போராட்டத்தை...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 8ஆவது தடவையாக விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மீண்டும் ஆஜராகியுள்ளார்.எட்டாவது தடவையாக இன்று (25) முற்பகல் மைத்திரிபால சிறிசேன, ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள நிலையில் அவரிடம்...

பிள்ளையானுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது போல ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்

பிள்ளையானுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது போல, எதிர்வரும் நாள்களில் ஏனைய பிரமுகர்களின் வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, அவர்களைச் சுத்தப்படுத்தும் வேலைகள் நடைபெறுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் காட்டுச் சட்டமும் காட்டு நீதிமன்றங்களுமே...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here