- Advertisement -
33 C
Colombo
Home Local News “AMPHAN” சூறாவளியின் தாக்கம் இன்றிலிருந்து குறைவடையும்

“AMPHAN” சூறாவளியின் தாக்கம் இன்றிலிருந்து குறைவடையும்

- Advertisement -

நாட்டின் வானிலையில் “AMPHAN” சூறாவளியின் தாக்கம் இன்றிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“AMPHAN” என்ற சூறாவளியானது இன்று (2020 மே 21ஆம் திகதி) முற்பகல் 08.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1420 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 19.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.70 E இற்கும் இடையில் வடமேற்குவங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கும்அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும்மேலாக மையம் கொண்டுள்ளது. இது வடக்கு – வடகிழக்கு திசையில் இலங்கையை விட்டு விலகி நகர்ந்து இன்று (மே 21ஆம் திகதி) பிற்பகலளவில் வங்காளதேசக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென்,மேல், சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல்மாகாணங்களில்பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறிப்பாக நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை காணப்படும். சில கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளும்காலியிலிருந்துஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீதி அபிவிருத்தி பணிகள் நேற்று முதல் ஆரம்பம்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு வருட பதவி பூர்த்தியினை முன்னிட்டு 341 உள்ளுராட்சி நிறுவனங்களிலுள்ள 341 வீதி அபிவிருத்தி பணிகள் நாடு முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஜா-எல, கந்தானை தெரசா...

349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த  மேலும் 349 இலங்கையர்கள் இன்று(30) நாடு திரும்பியுள்ளனர். தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அத்துடன், கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானின்...

‘கொரோனா இல்லாத எத்தனை ஜனாஸாக்களை எரித்தீர்கள்?’

கொவிட்-19 தொற்றாமல் மரணித்த எத்தனை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்துள்ளீர்கள் என எதிர்க்கட்சித் ​தலைவர் சஜித் பிரேமதாஸ, சுகாதார அமைச்சரிடம் சபையில் ​கேள்வியை எழுப்பினார்.

கடைசி சந்திர கிரகணம் இன்று பி.ப 03.13 மணிக்கு

2020ஆம் ஆண்டின் கடைசி  சந்திர கிரகணம் இன்று திங்கள் கிழமை இலங்கை நேரப்படி மதியம் 12.59 மணி முதல் மாலை 05.25 வரை நிகழும். சந்திர கிரகணத்தின் உச்சம் மதியம் 03.13 மணிக்கு  நிகழவுள்ளது.கடந்த ஜனவரி...

காரைநகர் இந்துக் கல்லூரி மூன்று நாட்களுக்கு பூட்டு..!

காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தெரிவித்தார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய இன்று திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here