- Advertisement -
24 C
Colombo
Home World News மதுபானங்களை டெலிவரி செய்ய தொடங்கியது ஸ்விக்கி!

மதுபானங்களை டெலிவரி செய்ய தொடங்கியது ஸ்விக்கி!

- Advertisement -

உணவு விநியோக ஆப் ஆன ஸ்விக்கி நிறுவனம், ஜார்கண்ட் அரசாங்கத்திடம் தேவையான ஒப்புதல்களைப் பெற்ற பின்னர் ராஞ்சியில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளது. வீட்டு வாசலியேயே மதுவைப் பெறுவதற்கான செயல்முறை ஆனது ஸ்விக்கி பிளாட்பார்மில் மளிகைப் பொருட்களை வாங்குவதைப் போன்றது தான். ஆனால் அது ‘Wine Shops’ (ஒயின் ஷாப்ஸ்) என்ற புதிய பிரிவின் கீழ் நடக்கும்.

ஸ்விக்கி வழியாக மதுபானம் வாங்குவோர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டி சில கட்டாயமான சரிபார்ப்புகள் (mandatory verifications) உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.

“அனைத்து ஆர்டர்களும் ஒரு தனித்துவமான OTP ஐக் கொண்டே நிகழும். குறிப்பிட்ட ஒடிபி-ஐ டெலிவரி செய்யும் போது வாடிக்கையாளரால் காட்டப்பட வேண்டும். ஒரு வாடிக்கையாளர் மாநில சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட ஆல்கஹால் ஆர்டர் செய்யக்கூடாது, செய்ய முடியாது. இந்த சேவையைப் பெற, ராஞ்சியில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்விக்கி ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும். அதாஹ்ன் வழியாக ‘ஒயின் ஷாப்ஸ்’ பிரிவை அணுக முடியும்” என்று ஸ்விக்கி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வழியிலான மதுபான விற்பனைக்கு ஸ்விக்கி அறிவித்துள்ள சரிபார்ப்பு செயல்முறை மிகவும் எளிது. உங்கள் வயதை சரிபார்க்க உங்கள்டவன் ஒரு அரசாங்க ஐடி தேவை. அந்த ஐடியை உங்கள் கையில் பிடித்தவாறு ஒரு செல்பீ எடுத்து அதை ஸ்விக்கி ஆப்பில் பதிவிட வேண்டும். நீங்கள் ஆன்லைனில் எத்தனை பாட்டில்களை வாங்கலாம் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கும், அதுவும் சரிபார்க்கப்படும். பின்னர் உங்கள் ஆர்டரைப் பெற்றதும் டெலிவரி எக்ஸிகியூட்டிவ் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய OTP-ஐ ஆப் வழியாக பெறுவீர்கள், அவ்வளவுதான். ஸ்விக்கி நிறுவனம் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தொடங்கிய முதல் நகரம் ராஞ்சி ஆகும். தேவையான அரசாங்க ஒப்புதல்களைப் பெற்றபின், இந்தியா முழுவதிலும் உள்ள பிற நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்தும் என்று ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.

மதுபானங்களை ஹாம் டெலிவரி செய்ய தொடங்க ஏற்கனவே பல மாநில அரசாங்கங்களுடன் மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்விக்கி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் ஹோம் டெலிவரி ஒரு வாரத்திற்குள் தொடங்கலாம்.

ஸ்விக்கி ராஞ்சி நகரில் தொடங்கி, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான வழியில் மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்வதாக கூறுகிறது. கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்க்கும் மற்றும் சமூக தூரத்தை ஊக்குவிக்கப்பதற்க்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்றும் ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here