- Advertisement -
25 C
Colombo
Home Local News மேல்மாகாணத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ளவர்களுக்கு இருப்பிடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை

மேல்மாகாணத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ளவர்களுக்கு இருப்பிடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை

- Advertisement -

மேல்மாகாணத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ளவர்களுக்கு இருப்பிடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது இருப்பிடங்கலுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று -02- சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிநடாத்தலில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி முதல்கட்டமாக 320 பேர் வரை இன்று சனிக்கிழமை அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

களனி பொலிஸ் வலயத்தில் இருந்தே அவர்கள் இவ்வாறு இருப்பிடங்களுக்கு அனுப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணிகள், சிறுவர்கள் உள்ளிட்டோர் இதில் உள்ளடங்குவதாகவும் அவர்களுக்கு வைத்திய பரிசோதனைகளை முன்னெடுத்த பின்னர் இவ்வாறு வீடுகளுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

முதல்கட்டமாக வீடுகளுக்கு அனுப்பப்படும் குறித்த 300 இற்கும் அதிகமானோர், பொலிஸ் பாதுகாப்புடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டிகளில், 23 மாவட்டங்களுக்கு அனுப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சரை தொடர்புகொண்டு கேட்க முற்பட்ட போதும் அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.

எனினும் அவரது அலுவலகத்தை தொடர்புகொண்ட போது, ஏற்கனவே இதற்கான வேலைத் திட்டம் வகுக்கப்பட்டாலும், இன்று சனிக்கிழமை முதல் அவ்வாறு அவர்கள் வீடுகளுக்கு அனுப்படுகின்றார்களா என்பது குறித்த உத்தியோகபூர்வமான தகவல்கள் தங்களிடம் இல்லை என அவரது அலுவலக அதிகாரிகள் கூறினர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாடசாலை சிறுவர் பூங்காவில் சுதந்திரமாக விளையாடும் குரங்குகள்…!

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதால் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலே குரங்குகள் அங்குமிங்கும்...

கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி சாரையடி பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்துப்பட்டி இறுகி உயிரிழந்துள்ளார். வீட்டு ஜன்னலின் கம்பியில் கழுத்துப்பட்டி கட்டப்பட்டு சுருக்கிடப்பட்ட நிலையில் 09 வயதான சிறுமி நேற்று (30) உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி விளையாட்டாக...

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்றுடன் வாழவேண்டியுள்ளது; WHO

கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலை களைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பாடசாலைகளை மூடிவிட முடியாது ஏனென்றால் உலக சுகாதார...

மின்சார கோளாறால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு 10 இலட்சம் ரூபாய்

இலங்கை மின்சார சபையின் மின் அமைப்பில் காணப்படும் தவறுகள் மற்றும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான காப்பீட்டுத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் அமைச்சர்...

ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.24 மணியளவில் இவ்வாறு...

Related News