- Advertisement -
31 C
Colombo
Home Local News கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள்

கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள்

- Advertisement -

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் இருந்ததாக தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று தெரியவந்துள்ளது.

குற்ற புலனாய்வுத் துறையின் தலைமை பரிசோதகர் யசஸ் சுவர்ண கீர்த்திசிங்க இன்று ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையில் கிங்ஸ்பெரி விருந்தக தாக்குதல் நடத்தியவர் சஹரான் ஹாசீமின் சாரதி என கூறினார்.

தாக்குதல் நடத்தப்பட்ட போது கிங்ஸ்பெரி ஹோட்டலின் பாதுகாப்பு பணிப்பாளராக செயல்பட்ட ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் ஐவன் தம்மிக துடுவத்த நேற்று முன்தினம் (21) ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார்.

அப்போது ஏப்ரல் 17, 2019 அன்று ஹோட்டலுக்கு வந்த ஒருவர், ´அப்துல்லா´ என்ற பெயரில் அறை ஒன்றை முன்பதிவு செய்து, 20 ஆம் திகதி அங்கு வந்து தங்குவதாக கூறி சென்றதாக அவர் சாட்சியம் அளித்தார்.

கிங்ஸ்பெரி ஹோட்டல் குண்டு தாக்குதல் குறித்து நேற்று (22) குற்ற புலனாய்வுத் துறையின் தலைமை பரிசோதகர் யசஸ் சுவர்ண கீர்த்திசிங்கவிடம் சாட்சியம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

சாட்சியம் வழங்கிய அவர், ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர், குண்டு தாக்குதலை நடத்தியவர் மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என அடையாளம் கண்டதாக தெரிவித்தார்.

தாக்குதலுக்கு முன்தினம் இரவு, தாக்குதல்தாரி சிவப்பு காரில் ஹோட்டலுக்கு வந்ததாக தெரிவித்து அது குறித்த சி.சி.டி.வி காட்சிகளை ஆணைக்குழுவில் முன்வைத்தார்.

அவ்வாறு வருகைத்தந்தவர் ஹோட்டலின் வரவேற்பாளர்களிடம் சென்று மூலையில் உள்ள கவுண்டரைப் பற்றி விசாரித்தாகவும் அவர் அவ்வாறு விசாரிக்க காரணம் சிசிடிவி கெமராக்களில் அகப்படாதிருக்கவே என அவர் தெரிவித்தார்.

அவ்வாறு வருகைத்தந்தவரிடம் அந்த சந்தர்ப்பத்திலும் வெடிப்பொருட்கள் இருந்தனவா என ஆணைக்குழு அதிகாரிகள் வினவினர்.

அதற்கு பதிலளித்த அவர் அந்த சந்தர்ப்பத்திலும் வெடிப்பொருட்கள் அவரிடம் இருந்ததாகவும் அவரின் உடலை அல்லது அவரின் பயண பையை பரிசோதிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் குண்டுதாரி ஹோட்டலின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு அறைக்குச் சென்றதாக அவர் சாட்சியம் வழங்கினார்.

அதே நாளில் இரவு 8.59 அளவில் குண்டுதாரி ஹோட்டலில் இருந்து புறப்பட்டதாகவும் ஹோட்டலுக்கு அவர் கொண்டு வந்த பைக்கு பதிலாக வேறு பையை வெளியில் எடுத்துச் சென்றதை அவதானித்தாகவும் அவர் கூறினார்.

பின்னர் அவர் காலி முகத்திடல் பக்கம் சென்று வாடகை வாகனம் ஒன்றை பெற்று இரவு 9.25 அளவில் கொலன்னாவையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றதாகவும் அவர் கூறினார்.

அவர் கடையில் இருந்து உணவு மற்றும் பானம் வாங்கியதாகவும், கொலன்னாவையில் உள்ள ஜயந்தி மாவத்தையில் உள்ள தனது வாடகை வீட்டிற்குச் சென்றதாகவும் அவர் சாட்சியம் அளித்தார்.

குண்டுதாரி முன்பு கிராண்பாஸ், பாணந்துறை, மட்டக்குளிய மற்றும் தெமடகொடையில் வாடகைக்கு தங்கியிருந்தாகவும் தெரிவித்தார்.

குண்டுதாரி தனது வீட்டில் சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை இருந்ததாகவும் அதன் பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் கருப்பு கைப்பையுடன் கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு திரும்பி வந்ததாகவும் அவர் சாட்சியமளித்தார்.

மேலும் அவர் 2010 ஆம் ஆண்டு முதல் 14 கையடக்க தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தியதாகவும் அவற்றில் 11 சிம் அட்டைகள் அவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் காத்தான்குடியில் நடந்த ஒரு மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பின் ஒத்திகையிலும் குண்டுதாரி பங்கேற்றதாக குற்ற புலனாய்வுத் துறையின் தலைமை பரிசோதகர் யசஸ் சுவர்ண கீர்த்திசிங்க மேலும் சாட்சியம் வழங்கினார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

மஹர சம்பவத்துக்கு ‘போதைப் பொருளே’ காரணம்: விமல்

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு அங்கு போதைப் பொருளே காரணம் என விளக்கமளிக்கிறார் விமல் வீரவன்ச. சிறைச்சாலை வளாகத்துக்குள் 'சரத்' எனும் புனைப்பெயரில் அறியப்படும் போதை மாத்திரையை சத்துர எனும் போதைப்பொருள்...

வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள்  பி.சி.ஆர் பரிசோதனை  நடத்தி சடலத்தை கையளிக்க  விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். வேறு நோய்களினால்...

கூரைத்தகடுகள் விநியோக வழக்கிலிருந்து பசில் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்தது. திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2,991 மில்லியன்...

வீதி அபிவிருத்தி பணிகள் நேற்று முதல் ஆரம்பம்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு வருட பதவி பூர்த்தியினை முன்னிட்டு 341 உள்ளுராட்சி நிறுவனங்களிலுள்ள 341 வீதி அபிவிருத்தி பணிகள் நாடு முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஜா-எல, கந்தானை தெரசா...

349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த  மேலும் 349 இலங்கையர்கள் இன்று(30) நாடு திரும்பியுள்ளனர். தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அத்துடன், கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானின்...

Related News