- Advertisement -
25 C
Colombo
Home World News Asia திருமணமான 9 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்! நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலம்

திருமணமான 9 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்! நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலம்

- Advertisement -

தமிழகத்தில் மூன்று மாத கர்ப்பிணி பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அப்பெண் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்து அரங்கமங்கலம் ஊராட்டி ஓணாங்குப்பம் ஏரிக்கரை தெரு வைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நெய்வேலி NLC நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மகளான வனிதா(25), சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் வனிதாவிற்கும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் சேட்டு என்பவரின் மகன் ராஜன் (32) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது வினிதாவுக்கு அவர்களது பெற்றோர்கள் 20 பவுன் தங்க நகை, கட்டில் , பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

மேலும் இது போதாது என்று ராஜன் கார் வேண்டும் என சீர்வரிசையாக கேட்டுள்ளார். இதற்கு வினிதாவின் பெற்றோர் காருக்கு பதிலாக 1.50 லட்சம் ரூபாய் பணம் கையில் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் வேலை செய்து வந்த ராஜன் தற்போது வேலையின்றி வீட்டில் இருந்து வந்துள்ளார்.

திருமணம் நடைபெற்ற நாளில் இருந்து அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி வினிதாவிடம் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தி வந்த நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன் புதிதாக பைக் வாங்கி தருமாறு ராஜன் மற்றும் அவரது பெற்றோர் வினிதாவிடம் கூறியதை அடுத்து அவர் அதை அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.

அதற்கு அவர் நெல் அறுவடை முடிந்ததும் வாங்கித் தருகிறேன் என கூறியுள்ளார்.

இதற்கிடையில், ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வினிதாவை உடனே பணம் வாங்கி வா என கூறியதுடன், கார் கேட்டதற்கு உங்க அப்பா வாங்கி தரவில்லை. இப்போது பைக் கேட்டும் ஏன் வாங்கி தரவில்லை. அதற்கான பணத்தை பெற்று கொண்டு வா என கூறி கணவனும், மாமியாரும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் , வினிதா மனவேதனையில் இருந்து வந்துள்ளார் . வினிதா தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜன், வினிதாவிடம் உன் அப்பாவிடம் போய் பணம் வாங்கி வா இல்லாவிட்டால் செத்துவிடு என்று கூற, இதனால் விரக்தியடைந்த வினிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார்.

இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று பரிதாபமாக இறந்துவிட்டார்.

சிகிச்சையின் போது, வினிதா நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் , கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து வினிதா வின் தாயார் செல்வி காவல்நிலையத்தில் அளித்த புகாரை வைத்து, கணவர் ராஜன் , தந்தை சேட்டு , தாய் கஸ்தூரி , சகோதரன் ராமச்சந்திரன் , சகோதரிகள் ராஜேஸ்வரி , அம்பிகா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...

Related News