- Advertisement -
28 C
Colombo
Home Local News மோடியிடம் கோட்டாபய கேட்ட உதவி! உடனடியாக கிடைத்த பதில்

மோடியிடம் கோட்டாபய கேட்ட உதவி! உடனடியாக கிடைத்த பதில்

- Advertisement -

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியா பங்காளர் மற்றும் நண்பர் என்ற அடிப்படையில் அர்ப்பணிப்பை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது, கொரோனாவை கட்டுப்படுத்தவும், ஸ்ரீலங்காவின் பொருளாதார பாதிப்பை சீர்செய்யவும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக மோடி உறுதி அளித்தார்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சீர் செய்ய, இந்தியா ரூ.8 ஆயிரத்து 360 கோடி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

முன்னதாக சார்க் மாநாட்டின்போது, இந்தியாவிடம் கோட்டாபய ராஜபக்ச ரூ.3 ஆயிரத்து 40 கோடி கேட்டிருந்தார். அதனுடன் சேர்த்து இந்த பணத்தையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேபோன்று, இந்திய நிதி உதவியுடன் ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்துவது பற்றியும் இருவரும் விவாதித்தனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய கட்டுமாணப் பணியை விரைவுபடுத்துமாறு இந்திய நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மோடியிடம் கோட்டாபய கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய ஒருநாளில் ஸ்ரீலங்காவிற்கு உதவத் தயார் என்று தூதுவர் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

இரண்டு நாடுகளின் தலைவர்களும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்களில் எப்போதும் ஒருவரொருக்கொருவர் முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தியா இலத்திரனியல் வர்த்தக வசதிகளுடன் வர்த்தக அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுடன் பொறிமுறை ஒன்றுக்கு தயாராகிவருகிறது என்றும் கோபால் பக்லே குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா நீண்டகால அடிப்படையில் போக்குவரத்து, வர்த்தக பொருளாதார விடயங்களில் நெருங்கி செயற்பட எதிர்பார்ப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...

Related News