- Advertisement -
25 C
Colombo
Home COVID-19 அடுத்த மூன்று வாரங்களில் உச்சமடையும்; எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரப் பணிப்பாளர்!

அடுத்த மூன்று வாரங்களில் உச்சமடையும்; எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரப் பணிப்பாளர்!

- Advertisement -

ஸ்ரீலங்காவின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 1200ஐ அண்மிக்கும் நிலையில் உள்ளது.

இதேவேளை சமூக இடைவெளியைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருந்தால் அடுத்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் உச்சமடையும். அதன் விளைவால் நாட்டில் பொதுத்தேர்தலையும் நடத்த முடியாததுடன், வேறு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது போய்விடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு என்னால் தெரிவிக்கப்பட்டுள்ளமை உண்மை. எனினும், தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தை வலுப்படுத்தாமலும், சாதாரண சூழலை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்காமலும், சமூக இடைவெளியைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமலும் இருந்தால் அடுத்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் உச்சமடையும்.

அப்போது நாட்டில் பொதுத் தேர்தலை நடத்த முடியாது.இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அரச தரப்பினர் மாத்திரமல்ல எதிர்த்தரப்பினர் உள்ளிட்ட அனைவரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோன தொற்று பரவுவதைத் தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சினால் மேலும் 50 வழிகாட்டுதல்கள் வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டுவர அனைத்து ஊழியர்களையும் பணிபுரியுமாறு கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன், பணி நிமித்தம் எத்தனை ஊழியர்களை தங்களின் நிறுவனங்களில் பணிக்காக அமர்த்த வேண்டும் என்பதை நிறுவனத்தின் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...

Related News