- Advertisement -
31 C
Colombo
Home World News Asia மீண்டும் ஒரு சுஜித்! 120 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்:...

மீண்டும் ஒரு சுஜித்! 120 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்: 6 மணி நேரமாக தவிக்கும் பரிதாபம்

- Advertisement -

இந்தியாவில் 3 வயது சிறுவன் ஒருவன் 150 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்ததால், அவரைக் காப்பாற்ற மீட்டு படையினர் போராடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வருபவர் கோவர்தன், இவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் மெடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு விடுமுறைக்காக சென்று தங்கியுள்ளார்.

கோவர்தனின் தந்தை பிக்‌ஷபதி, தனது விவசாய நிலத்தில் கடந்த வாரம் 3 ஆழ்துளை கிணறுகளை தோண்டியுள்ளார்.

அதில் தண்ணீர் கிடைக்காததால் இன்று அதனை மூடிவிட முடிவெடுத்து மாலை அதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தார். குடும்பத்தினரும் அப்போது உடன் இருந்துள்ளனர்.

அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த கோவர்தனின் 3 வயது மகன் அப்போது 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் மாலை 5 மணிக்கு தவறி விழுந்துள்ளான்.

இதனால் செய்வதறியாது திகைத்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியை தொடங்கினர்.

போர்வெல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டப்பட்டு வருகிறது.

இதனிடையே இரவு நேரம் ஆகிவிட்டதால் விளக்குகள் பொறுத்தப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குழிக்குள் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்படாமலிருக்க ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் தர்மா ரெட்டி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்தனா தீப்தி ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். சிறுவன் 25 முதல் 30 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே போல தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 60 மணி நேரம் மீட்புப் பணிகள் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்கள் பலரையும் கண்ணீர் சிந்த வைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பிரான்ஸில் புதிய சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம்!!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறியதால் 60க்கும் மேற்பட்ட பொலிஸார் படுகாயம் அடைந்தனர். பிரான்ஸில் மோசமான நோக்கத்துடன் பொலிஸாரை புகைப்படம் அல்லது காணொளி எடுப்பது தண்டனைக்குரிய குற்றம்...

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,155பேர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 215பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும்...

சகோதரர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் கொலை, சந்தேக நபர் தலைமறைவு!

முல்லேரியா பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிவிட்ட பகுதியில் நேற்று (29) இரவு சகோதரர்கள் இருவருக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது....

கொல்லப்பட்ட அணு விஞ்ஞானியை அடக்கம் செய்ய தயாராகும் ஈரான்!

கொல்லப்பட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவை வடக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு கல்லறையில் ஈரான் அடக்கம் செய்வதாக அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் ஒரு விழாவில் ஈரானிய கொடியால் மூடப்பட்ட ஃபக்ரிசாதேவின்...

கான்ஸ்டபிளை ரிப்பரால் மோதிக் கொன்ற சம்பவம்: அம்பலமான மேலும் பல தகவல்கள்!

குருணாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் ரிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சுமார் 10 மணி...

Related News